விளையாட்டு

சில நிமிடங்களில் IPL சாதனையை இழந்த கம்மின்ஸ்.. சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்.. CSK எடுத்த வீரர்கள் யார்?

சில நிமிடங்களில் IPL சாதனையை இழந்த கம்மின்ஸ்.. சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்.. CSK எடுத்த வீரர்கள் யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.

சில நிமிடங்களில் IPL சாதனையை இழந்த கம்மின்ஸ்.. சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்.. CSK எடுத்த வீரர்கள் யார்?

இதில், தற்போது வரை நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செலை 14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. மற்றொரு நியூஸிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், இந்திய வீரர் ஷர்துல் தாகூரை 4 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை அணி.

அதே நேரம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸை 20 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற பெருமையை பெற்றார் பேட் கம்மின்ஸ்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அவரிடமிருந்து அந்த சாதனையை அவரிடமிருந்து தட்டிப் பறித்துள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். அவரை வாங்க குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டி போட்ட நிலையில், இறுதியில் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

banner

Related Stories

Related Stories