இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். தோனியின் தனித்துவமான தலைமைப்பன்பாலேயே இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பைகளை குவித்ததாக பல்வேறு வீரர்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், எங்கள் யாரையும் தோனியுடன் ஒப்பிட முடியாது என தற்போதைய இந்திய அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் கூறியுள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் கே.எல்.ராகுலிடம் தோனி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எங்களில் யாரையும் தோனியுடன் ஒப்பிட முடியாது. äதுபோல யாரும் அந்த உயர்ந்த மனிதனுடன் ஒப்பிட விரும்பமாட்டோம். தோனிதான் எப்போதும் எங்களுக்கு தலைவர். அவரிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். டி.ஆர்.எஸ்., ஸ்டம்பிங்கில் அவர் செய்ததைப் பார்த்து, நான் தனிப்பட்ட முறையில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்"என்று கூறியுள்ளார்.