ஆசிய விளையாட்டுப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது. தற்போது19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுவாக ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் இடம்பெறாத நிலையில், இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்குச் சென்று இலங்கையுடன் மோதியது. இந்தப்போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்கப்பதக்கத்தை இந்திய மகளிர் அணி வென்றது.
அதேபோல் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியும் நடைபெற்று வருகிறது. இதில் நேபாளத்தைச் சேர்ந்த வீரர் 6 பந்துக்கு 6 சிக்சர்கள் அடித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சாதனையை முறியடித்துள்ளார்.
குரூப் ஏ பிரிவில் இன்றிய ஆட்டத்தில் நேபாளம் - மங்கோலியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர் முடிவில் 314 ரன்கள் எடுத்தது. இதில் திபேந்திர சிங் என்ற வீரர் 9 பத்திகளில் 8 சிக்சர்கள் அடித்து அரைசதம் அடித்துள்ளார். மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் 16 ஆண்டுகால சாதனையையும் இவர் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இவர் அரைசதம் அடிக்கும்வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர். இப்போட்டியில் மங்கோலியா அணி 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.