விளையாட்டு

சஞ்சு சாம்சனை பொய் சொல்லித்தான் டிராவிட்டிடம் அறிமுகப்படுத்தினேன் - ஸ்ரீசாந்த் கலகல பேச்சு !

சஞ்சு சாம்சனை பொய் சொல்லித்தான் முதல்முறையாக ராகுல் டிராவிட்டிடம் அறிமுகப்படுத்தினேன் என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சனை பொய் சொல்லித்தான் டிராவிட்டிடம் அறிமுகப்படுத்தினேன் - ஸ்ரீசாந்த் கலகல பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2014ம் ஆண்டு Under-19 உலகக் கோப்பை போட்டியில் துணை கேப்டனாக இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர் சஞ்சு சாம்சன். இந்த தொடரில் 54 பந்தில் 85 ரன்களை அடித்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். இதன் பிறகு இந்திய அணியில் 2015ம் ஆண்டு அறிமுகமானார். இவரின் முதல் போட்டி ஜிம்பாபே உடன்தான். இதுவும் டி20 போட்டி.

அதன் பிறகு தொடர்சியாக இந்திய அணியில் இடம் பெற்று வந்தாலும் அப்போது, தோனி, தினேஷ் கார்த்தி போன்ற முன்னணி வீரர்கள் இருந்ததால் இவருக்குத் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.அதன் பின்னர் பந்த், இஷான் கிஷன் போன்றோரும் சாம்சனுக்கு கடும் போட்டியாக வந்ததால் 8 வருடம் ஆகியும் மிக குறைவான போட்டிகளில்தான் இந்திய அணிக்காக அவர் ஆடியுள்ளார்.

எனினும் கடந்த சில போட்டிகளாக ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் அவருக்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சஞ்சு சாம்சனை பொய் சொல்லித்தான் டிராவிட்டிடம் அறிமுகப்படுத்தினேன் - ஸ்ரீசாந்த் கலகல பேச்சு !

இந்த நிலையில், சஞ்சு சாம்சனை பொய் சொல்லித்தான் முதல்முறையாக ராகுல் டிராவிட்டிடம் அறிமுகப்படுத்தினேன் என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய ஸ்ரீசாந்த், "சஞ்சு சாம்சனை ராகுல் டிராவிட்டிடம் அறிமுகம் செய்த போது, இவர் தான் உள்ளூர் கிரிக்கெட்டில் என் பந்தில் 6 சிக்சர் அடித்தவர் என்று பொய் சொல்லி அறிமுகப்படுத்தினேன்

ஆனால், ராகுல் டிராவிட், சிரித்துக்கொண்டே என்னிடம் நீ இப்படியா பொய் சொல்வது என்று கேட்டார். அதன்பின்னர் சஞ்சு சாம்சனை டிராவிட் பார்த்தபோது அவருக்கு சஞ்சுவின் பேட்டிங் பிடித்திருந்தது. இதனால் சஞ்சுவை வேறு எந்த அணிக்கு செலக்‌ஷனுக்கும் அனுப்பவேண்டாம். ஐபில் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்வோம். அவருக்கு போட்டியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் நாம் அவரை ஒப்பந்தம் செய்வோம்" என்று கூறியதாக கூறியுள்ளார். சஞ்சு சாம்சனும் ஸ்ரீசாந்தும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories