விளையாட்டு

மழையால் பாதிக்கப்படும் போட்டிகள் : "இந்திய ரசிகர்களே ஜெய் ஷாவை விமர்சிப்பார்கள்" -பாக். வீரர் காட்டம் !

ஆசிய கோப்பை தொடரை இலங்கையில் நடத்த முடிவு செய்த ஜெய் ஷாவை இந்திய ரசிகர்களே விமர்சிப்பார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

மழையால் பாதிக்கப்படும் போட்டிகள் : "இந்திய ரசிகர்களே ஜெய் ஷாவை விமர்சிப்பார்கள்" -பாக். வீரர் காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. எனினும், ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

மழையால் பாதிக்கப்படும் போட்டிகள் : "இந்திய ரசிகர்களே ஜெய் ஷாவை விமர்சிப்பார்கள்" -பாக். வீரர் காட்டம் !

இது குறித்த சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், பிசிசிஐ-யின் பணபலத்துக்கு இதர ஆசிய அணிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், இறுதியில் பாகிஸ்தான் இறங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆசிய கோப்பைக்கான அட்டவணையில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன.

அதன்படி இலங்கையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற இந்தியா -நேபாளம் போட்டியிலும் மழை குறிக்கிட்டதால் ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதோடு இன்னும் மீதம் இருக்கும் போட்டிகளும் மழையால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனிடையே இந்த மழை காலத்தில் இலங்கையில்தான் ஆசிய கோப்பை போட்டி நடைபெறவேண்டும் என அடம்பிடித்த பிசிசிஐ-யையும், அதன் செயலாளர் ஜெய் ஷாவையும் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரை இலங்கையில் நடத்த முடிவு செய்த ஜெய் ஷாவை இந்திய ரசிகர்களே விமர்சிப்பார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

மழையால் பாதிக்கப்படும் போட்டிகள் : "இந்திய ரசிகர்களே ஜெய் ஷாவை விமர்சிப்பார்கள்" -பாக். வீரர் காட்டம் !

இதுகுறித்துப் பேசிய அவர், " இந்த காலகட்டத்தில் இலங்கையில் நடைபெறும் போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் என்பது அனைவரும் தெரியும். அங்குள்ள வானிலையை அனைவரும் அறிவர். ஆனால், அப்படியிருந்தும் அங்கு போட்டிகள் நடைபெற சிலரின் ஈகோ தான் முக்கிய காரணம் . இதனால் பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை பார்க்க முடியாமல் போனதால் இந்திய ரசிகர்களே ஏமாற்றமடைந்து ஜெய் ஷாவை விமர்சிப்பார்கள். கிரிக்கெட்டுக்கு மதிப்பு கொடுத்து அரசியலை விட்டு இத்தொடரை பாகிஸ்தானில் முழுமையாக நடத்துவதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்திருந்தால் ஆசிய கோப்பை மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories