இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
இந்த நிலையில் தான் செய்த தவறுக்காக தோனியிடன் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார். இது குறித்து சமீபத்தில் பேசிய அக்தர், ” கடந்த 2006ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுகு வந்தபோது பைசலாபாத்தில் நடந்த போட்டியில் தோனி அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். நான் எவ்வளவு வேகமாக பந்து வீசினாலும், அவர் அடித்துக்கொண்டே இருந்தார்.
இதனால் நான் வேண்டுமென்றே தோனியிடம் ஒரு பீமர் பந்தை வீசினேன் (நேராக பந்தை எரிவது). அதன் பின்னர் அப்படி நான் செய்திருக்கக் கூடாது என மிகவும் வருந்தினேன். அதன்பின்னர் தோனியிடம் இது குறித்து நான் மன்னிப்பு கேட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நான் வேண்டுமென்றே ஒரு பீமர் பந்து வீசியது இதுவே முதல் முறை.
விக்கெட்டுகள் மெதுவாக இருந்து தோனி தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்ததால் நான் விரக்தியடைந்து அப்படி செய்தேன் என நினைக்கிறேன். அதற்காக இப்போதும் நான் மிகவும் வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.