விளையாட்டு

"சஞ்சு சாம்சன் எந்த இடத்தில் ஆடினாலும் 30-ஐ தாண்டுவதில்லை " -விமர்சித்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா !

சஞ்சு சாம்சன் எந்த இடத்திலும் 30-க்கும் அதிகமான சராசரியை வைத்திருக்கவில்லை என இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா விமரசித்துள்ளார்.

"சஞ்சு சாம்சன் எந்த இடத்தில் ஆடினாலும் 30-ஐ தாண்டுவதில்லை " -விமர்சித்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2014ம் ஆண்டு Under-19 உலகக் கோப்பை போட்டியில் துணை கேப்டனாக இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர் சஞ்சு சாம்சன். இந்த தொடரில் 54 பந்தில் 85 ரன்களை அடித்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். இதன் பிறகு இந்திய அணியில் 2015ம் ஆண்டு அறிமுகமானார். இவரின் முதல் போட்டி ஜிம்பாபே உடன்தான். இதுவும் டி20 போட்டி.

அதன் பிறகு தொடர்சியாக இந்திய அணியில் இடம் பெற்று வந்தாலும் அப்போது, தோனி, தினேஷ் கார்த்தி போன்ற முன்னணி வீரர்கள் இருந்ததால் இவருக்குத் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

அதன் பின்னர் பந்த், இஷான் கிஷன் போன்றோரும் சாம்சனுக்கு கடும் போட்டியாக வந்ததால் 8 வருடம் ஆகியும் மிக குறைவான போட்டிகளில்தான் இந்திய அணிக்காக அவர் ஆடியுள்ளார். தற்போது இவருக்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினார்.

அதனைத் தொடர்ந்து முதலாவது டி20 போட்டியிலும் முக்கிய கட்டத்தில் ரன்அவுட்டானார். இந்திய அணியின் தோல்விக்கு இவர் ஆட்டமிழந்தது முக்கிய காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில், சஞ்சு சாம்சன் எந்த இடத்திலும் 30-க்கும் அதிகமான சராசரியை வைத்திருக்கவில்லை என இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா விமரசித்துள்ளார்.

"சஞ்சு சாம்சன் எந்த இடத்தில் ஆடினாலும் 30-ஐ தாண்டுவதில்லை " -விமர்சித்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா !

இது குறித்து பேசிய அவர், "டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் சராசரி எந்த இடத்திலும் சிறப்பாக இல்லை. மற்றவர்களைப் போல் அவருக்கு தொடர்ந்து அதிகமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளில் 26, 16, 14, 12, 19 என்பதே டாப் 5 இடங்களில் அவருடைய பேட்டிங் சராசரியாக இருக்கிறது. இது இந்திய அணியில் இடம்பெற போதுமானது அல்ல.

இந்த புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு அவர் 4வது இடத்தில் விளையாட தகுதியானவர் என்றும் நம்மால் சொல்ல முடியாது.சாம்சன் 6வது இடத்தில் விளையாடினார். ஆனால், இந்த இடத்தில விளையாடுபவர்கள் எப்போதுமே பெரிய ரன்கள் குவிக்க முடியாது. இருப்பினும் சஞ்சு சாம்சன் வெற்றியை பெற்றுக் கொடுக்கும் இன்னிங்ஸ் விளையாடும் திறமையை கொண்டிருப்பதால் தொடர்ந்து 6வது இடத்திலேயே விளையாடலாம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories