விளையாட்டு

“நீ என் கால் தூசுக்கு சமம்” -ஆப்கான் வீரரை விமர்சித்தாரா கோலி.. ஆப்கான் வீரரின் பதிலடியால் பரபரப்பு !

 “நீ என் கால் தூசுக்கு சமம்” -ஆப்கான் வீரரை விமர்சித்தாரா கோலி.. ஆப்கான் வீரரின் பதிலடியால் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முன்னதாக பெங்களூருவில் இந்த அணிகள் மோதிய போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றிருந்தது.

அப்போது வென்ற மகிழ்ச்சியில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை எரிந்து வெற்றியை கொண்டாடியது மற்றும் லக்னோ பயிற்சியாளர் காம்பிர் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.

 “நீ என் கால் தூசுக்கு சமம்” -ஆப்கான் வீரரை விமர்சித்தாரா கோலி.. ஆப்கான் வீரரின் பதிலடியால் பரபரப்பு !

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. லக்னோ மைதானம் சமீப சில போட்டிகளாக பேட்டிங் ஆட கடுமையாக இருந்துவந்த நிலையில், பெங்களூரு அணி மெதுவாக ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் கோலி 33 ரன்களும் டு பிளிஸிஸ் 44 ரன்களும், தினேஷ் கார்த்திக் 16 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இவர்களைத் தவிர இதர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் ஆட்டமிழக்க பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் ஆடிய லக்னோ அணியும் ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இறுதியில் லக்னோ அணி 19.5 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

 “நீ என் கால் தூசுக்கு சமம்” -ஆப்கான் வீரரை விமர்சித்தாரா கோலி.. ஆப்கான் வீரரின் பதிலடியால் பரபரப்பு !

இந்த போட்டியின்போது பெங்களூரு அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ அணி வீரர் நவீன் உல் காஹ்க்கும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவை தாக்கி அதில் உள்ள தூசுதான் நீ என நவீன் உல் காஹ்க்கை நோக்கி காட்டியதுபோல காட்சி இடம்பெற்றது.

பின்னர் இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் லக்னோ வீரர் கையில் மேயர்ஸ் விராட் கோலியோடு பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை காம்பிர் பேசவேண்டாம் என்பதுபோல இழுத்துச்சென்றார்.இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி காம்பிரிடம் ஏதோ கூற கோலிக்கும் காம்பிருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

 “நீ என் கால் தூசுக்கு சமம்” -ஆப்கான் வீரரை விமர்சித்தாரா கோலி.. ஆப்கான் வீரரின் பதிலடியால் பரபரப்பு !

இந்த நிலையில், இந்த சம்பவங்களுக்கு பிறகு பெங்களூரு அணி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசும் விராட் கோலி, "நீங்கள் ஒன்று கொடுக்க நினைக்கிறீர்கள் என்றால் அதை திருப்பிப் பெற்றுக் கொள்ள தயாராக இருங்கள். இல்லையெனில் அதை செய்யாதீர்கள்" எனக் கூறியது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதை போல ஆனது.

இதனைத் தொடர்ந்து லக்னோ வீரர் நவீன் உல் காஹ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கிடைத்தே தீரும். அது தான் வழக்கம்" எனக் கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விராட் கோலியைதான் மறைமுகமாக நவீன் உல் காஹ் குத்தி காட்டியுள்ளார் எனக் கூறியுள்ளனர். இந்த சம்பவம் ஐபிஎல் தொடரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories