விளையாட்டு

”இந்திய அணியின் இந்த மோசமாக தோல்விக்கு காரணமே இதுதான்” -தினேஷ் கார்த்திக் கூறியது என்ன ?

இந்திய அணியில் ஏற்பட்ட பேட்டிங் குழப்பமே இந்த மோசமான தோல்விக்கு காரணம் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

”இந்திய அணியின் இந்த மோசமாக தோல்விக்கு காரணமே இதுதான்” -தினேஷ் கார்த்திக் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணியை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் தொடர்ச்சியாக நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்து இந்திய அணி சாதனைப் படைத்தது.

அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. மும்பையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

”இந்திய அணியின் இந்த மோசமாக தோல்விக்கு காரணமே இதுதான்” -தினேஷ் கார்த்திக் கூறியது என்ன ?

பின்னர் ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இணை சரிவில் இருந்து அணியை மீட்டது. அணி 83 ரன்களை எடுத்தபோது இந்த ஜோடி பிரிந்து ஹர்திக் பாண்டியா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல்- ஜடேஜா இணை இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெறவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டணத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

”இந்திய அணியின் இந்த மோசமாக தோல்விக்கு காரணமே இதுதான்” -தினேஷ் கார்த்திக் கூறியது என்ன ?

சுப்மன் கில்(0), ரோகித் சர்மா(13), சூரியகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல்(9) , ஹர்திக் பாண்டியா(1 ) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கோலி, ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் இரட்டை இலக்க ரன்களை எடுக்க இந்திய அணி ஒருவழியாக 100 ரன்களை கடந்து 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிச்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. இதனால் வெறும் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் குவித்த அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

”இந்திய அணியின் இந்த மோசமாக தோல்விக்கு காரணமே இதுதான்” -தினேஷ் கார்த்திக் கூறியது என்ன ?

இந்த நிலையில், இந்திய அணியில் ஏற்பட்ட பேட்டிங் குழப்பமே இந்த மோசமான தோல்விக்கு காரணம் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய அணியில் . சூர்யா ஒரு பேக் அப் வீரராக இருக்கிறார். ஸ்டார்க் வீசிய அந்த உயர்தர பந்துவீச்சில் சூர்யகுமார் டி20யில் கூட ஆட்டமிழ்நதிருப்பார்.

சூர்யகுமாரை சிறப்பான ஆடவைக்க அவரை ஆறாவது இடத்தில் அனுப்பி, சிறப்பாக பேட்டிங் செய்யும் ஹர்திக் பாண்டியாவை 4-வது இடத்தில களமிறக்க இந்திய அணி யோசிக்கலாம்.சூர்யகுமாருக்கு இறுதியில் 15-18 ஓவர்கள் கிடைக்கும்போது , ​​அவர் ஆட்டத்தை தலைகீழாக மாற்றுவார்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories