மகளிர் டி20 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்திய மகளிர் அணி கோப்பையை முதல் முறையாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வியடைந்தது இறுதிப்போட்டிக்குச் செல்லாமல் வெளியேறியது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு 173 ரன்களை இலக்கு வைத்தது. இந்த இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொடுத்து வெளியேறினர்.
இருந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிதானமாக ஆடினார். அவருடன் ஜெமிமாவுடன் கைகோர்த்து இந்திய அணியின் ரன்களை உயர்த்தினர். இந்த கூட்டணியின் ஆட்டத்தைப் பார்த்த எல்லோருக்கும் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் 15வது ஓரில் 130 ரன்கள் இருந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் அவுட் ஆனார். பின்னர் கடுமையாக போராடிய இந்திய அணி வீரர்களால் 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் ரன்வுட் ஆனது 2019ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் எம்.எஸ்.தோனி ரன் அவுட் ஆனதை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போன்று இருந்தது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் தோனி ரன் அவுட் ஆனதையும் ஹர்மன்பிரித் அவுட் ஆன படத்தையும், வீடியோவையும் ஒப்பிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்த தொடரில் இந்திய அணி தோற்றாலும், இறுதிவரை விடாமல் போராடியதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.