சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் இந்திய அணி கண்ட சிறப்பான பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலிதான். எத்தனையோ வீரர்கள் வந்து சென்றாலும் உலகின் நம்பர் ஒன் வீரராக இருப்பவர் விராட் கோலிதான். அந்த அளவிற்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி விளையாடினாலே சதம் அடிப்பார் என்று இருந்தது. ஆனால் கடந்த மூன்று வருடமாக அவரால் அப்படி விளையாட முடியவில்லை. பல சிக்கல்களை சந்தித்து பிறகு, :நான் திரும்ப வந்துவிட்டேனு சொல்லு' என்ற படி கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 3 சதங்களை அடித்துள்ளார் விராட் கோலி.
மேலும் சச்சின் அடித்த 49 சதங்களை யாராலும் முறியடிக்க முடியாது என முன்பு சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படி யாரும் சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் அந்த சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 4 சதங்கள் மட்டுமே உள்ளது. 27 ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களை அடித்துள்ளார்.
இப்படி உலகின் நம்பர் ஒன் வீரராக விராட் கோலி இருக்கும் நிலையில், நான்தான் உலகின் நம்பவர் ஒன் வீரர், விராட் கோலி அல்ல என பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துக் கூறிய குர்ரம் மன்சூர், "நான் என்னை விராட் கோலியுடன் ஒப்பிடவில்லை. உண்மை என்னவென்றால் 50 ஓவர் போட்டியில் டாப் 10ல் யார் இருந்தாலும் நான்தான் உலகின் நம்பவர் 1. ஒவ்வொரு 6 போட்டிக்கும் விராட் கோலி சதம் அடிக்கிறார். ஆனால் நான் 5.68 போட்டிகளில் சதம் அடிக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் எனது சராசரி 53 அடிப்படையில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் உலக அளவில் 5வது இடத்தில் இருக்கிறேன். கடந்த 48 போட்டிகளில் 24 சதங்களை அடித்துள்ளேன். தேசிய டி20 போட்டியில் அதிக சதம் அடித்ததும் நான்தான். இப்படிப் பல சாதனைகள் இருந்தாலும் நான் புறக்கணிக்கப்படுகிறேன்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் 2016ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் உள்நாட்டுத் தொடர்களில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். மன்சூர் முதல் தரபோட்டிகளில் 12000 ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 8000 ரன்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.