விளையாட்டு

“நா இத தாங்க சொன்னேன்..” : களத்தில் வங்கதேச வீரரிடம் சிராஜ் கூறியது என்ன ? - அவரே சொன்ன கலகல விளக்கம் !

வங்கதேச வீரர் லிட்டன் தாஸிடம், இந்திய வீரர் சிராஜ் களத்தில் இருந்து கூறிய வார்த்தைக்கு, தாஸ் நக்கலாக செய்கை செய்தது தொடர்பாக சிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

“நா இத தாங்க சொன்னேன்..” : களத்தில் வங்கதேச வீரரிடம் சிராஜ் கூறியது என்ன ? - அவரே சொன்ன கலகல விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்த நிலையில் இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்றைய முன்தினம் சட்டோகிராம் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை குவித்த இந்திய அணி 2-வது நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்தது.

“நா இத தாங்க சொன்னேன்..” : களத்தில் வங்கதேச வீரரிடம் சிராஜ் கூறியது என்ன ? - அவரே சொன்ன கலகல விளக்கம் !

சிறப்பாக ஆடிவந்த ஸ்ரேயாஸ் 86 ரன்களில் வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த அஸ்வின், குல்தீப் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அஸ்வின் 58 ரன்களிலும், குல்தீப் 40 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 404 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. Najmul hussain, Zahir hassan, யாசிர் அலி, லிட்டன் தாஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னோடு வந்த வேகத்திலேயே நடையை கட்டினர். 2ம் நாள் முடிவடைந்த நிலையில், வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

“நா இத தாங்க சொன்னேன்..” : களத்தில் வங்கதேச வீரரிடம் சிராஜ் கூறியது என்ன ? - அவரே சொன்ன கலகல விளக்கம் !

இந்திய தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். தற்போதைய நன்மையில், இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் போது நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த போட்டியில் சிராஜ் பந்துவீச வந்த போது, வங்கதேச வீரர் லிட்டன் தாஸை பார்த்து சிராஜ் ஏதோ கூறிய நிலையில், அதற்கு தனது காதில் எதும் விழவில்லை என்று லிட்டன் தாஸ் சிராஜை கிண்டல் செய்தார். ஆனால் இதற்கு அடுத்த பந்திலேயே லிட்டன் தாஸ் விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தினார்.

“நா இத தாங்க சொன்னேன்..” : களத்தில் வங்கதேச வீரரிடம் சிராஜ் கூறியது என்ன ? - அவரே சொன்ன கலகல விளக்கம் !

அப்போது சிராஜ் தனது வாயில் விரல் வைத்து சத்தம் வரக் கூடாது என்று சொல்லும் வகையில் செய்கை செய்ய மற்றொரு பக்கம் விராட் கோலி, தனக்கே உரிய பாணியில் லிட்டன் தாஸ் என்ன செய்தாரோ அதையே செய்தார். இது தொடர்பாக புகைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது.

“நா இத தாங்க சொன்னேன்..” : களத்தில் வங்கதேச வீரரிடம் சிராஜ் கூறியது என்ன ? - அவரே சொன்ன கலகல விளக்கம் !

இந்த நிலையில் தான் லிட்டன் தாஸிடம் கூறியது என்ன என்பது குறித்து செய்தியாளர் சந்திப்பில் சிராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "அது ஒரு நட்பு ரீதியான பேச்சு தான். நான் அவரிடம் இது ஒன்றும் டி20 போட்டி கிடையாது ,டெஸ்ட் போட்டி.. அதனால் நிதானமாக விளையாடு என்று அறிவுரை கூறினேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆடுகளத்தில் ஒரே மாதிரியான பந்துகளை வீச வேண்டும். நீங்கள் வித்தியாசமாக பந்து வீசுகிறேன் என்று முயற்சி செய்தால் நீங்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுக்க நேரிடும். எனவே நான் ஸ்டெம்பை குறி வைத்து தொடர்ந்து வீசினேன். நான்காண்டுகளுக்கு முன்பு திடீரென்று இன்ஸ்விங் பந்துகளை என்னால் வீச முடியவில்லை.

அப்போது வெறும் அவுட் ஸ்விங் மட்டும்தான் எனக்கு பயனைத் தந்தது. புதிய யுத்தி இதனால் நான் மிகவும் கவலை பட்டேன் ஏன் என்னால் இன் ஸ்விங் பந்துகளை வீச முடியவில்லை என்று யோசித்தேன். அதன் பிறகு wobble seam என்ற யுத்தியை யுத்தியை பயன்படுத்தத் தொடங்கினேன்" என்றார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories