விளையாட்டு

சஞ்சு சாம்சனால் நாங்கள் பயந்தோம்.. முதல் போட்டியின் வெற்றிக்கு பின் தென்னாப்பிரிக்க வீரர் கூறியது என்ன?

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி.

சஞ்சு சாம்சனால் நாங்கள் பயந்தோம்.. முதல் போட்டியின் வெற்றிக்கு பின் தென்னாப்பிரிக்க வீரர் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி 40 ஓவர்களாகக் குறைக்கப்பட, 250 என்ற பெரிய இலக்கை சேஸ் செய்தது இந்திய அணி. அணியின் டாப் ஆர்டர் வேகமாக சரிந்த நிலையில் சஞ்சு சாம்சன் (86 நாட் அவுட்), ஷ்ரேயாஸ் ஐயர் (50) ஆகியோர் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அவர்களால் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 30 ரன்கள் தேவை என்றிருந்தபோது, தப்ராய்ஸ் ஷம்ஸி வீசிய அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன்.

ஆட்டத்தின் 39வது ஓவரில் சஞ்சு சாம்சனுக்கு ஒரு பந்து கூட கிடைக்கவில்லை. அவேஷ் கானே ஐந்து பந்துகள் சந்தித்துவிட்டார். ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க இந்த கூட்டணி முடிவு செய்ததை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் எல்லோருமே விமர்சித்து வருகின்றனர். அவேஷ் கானை வெளியேற்றிய பிறகு ரபாடா ஒரு நோ பால் கூட வீசினார். ரவி பிஷ்னாயின் பேட்டில் பட்டு எட்ஜான பந்து தேர்ட் மேன் திசையில் பௌண்டரி ஆனது. இப்படி பௌலர்களே அந்த ஓவரின் அனைத்து பந்துகளையும் சந்தித்ததால் சாம்சன் நான் ஸ்டிரைக்கர் எண்டிலேயே இருக்கவேண்டியதாக இருந்தது.

சஞ்சு சாம்சனால் நாங்கள் பயந்தோம்.. முதல் போட்டியின் வெற்றிக்கு பின் தென்னாப்பிரிக்க வீரர் கூறியது என்ன?
Anthony Au-Yeung-IDI

கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது, முதல் பந்தையே வைடாக வீசினார் தப்ராய்ஸ் ஷம்ஸி. அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசிய சாம்சன், அதற்கடுத்த இரண்டு பந்துகளில் ஃபோர் அடித்தார். நான்காவது பந்தில் அவர் பவுண்டரி அடிக்கத் தவறவே, இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் வெற்றி உறுதி ஆனது.

இந்தப் பரபரப்பான போட்டி பற்றி ஆட்டம் முடிந்ததும் பேசிய தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் இந்தப் போட்டி தன்னை மிகவும் விறுவிறுப்பாக வைத்திருந்ததாகக் கூறினார். ரபாடா நோ பால் வீசியபோது தான் மிகவும் பயந்ததாகக் கூறினார் அவர். ஏனெனில் சஞ்சு சாம்சனால் என்ன முடியும் என்பதை அவர் ஐபிஎல் தொடரில் பார்த்திருக்கிறாரே!

சஞ்சு சாம்சனால் நாங்கள் பயந்தோம்.. முதல் போட்டியின் வெற்றிக்கு பின் தென்னாப்பிரிக்க வீரர் கூறியது என்ன?

"அந்த ஓவரின் கடைசி பந்தை ரபாடா நோ பாலாக வீசியதும் நான் சற்று பயந்துவிட்டேன். இந்தப் போட்டி மாறிவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். ஏனெனில் சஞ்சு சாம்சன் போன்ற ஒரு வீரரால் என்ன செய்ய முடியும் என்று நம்மால் யூகிக்கவே முடியாது. அவர் இருக்கும் ஃபார்முக்கு, அவர் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்திருக்கிறேன். அவர் பௌலர்களை எதிர்கொள்ளும் விதம், நினைத்த மாத்திரத்தில் சிக்ஸர் அடிக்கும் திறமை, கடைசி இரண்டு ஓவர்களில் அவர் ஆடும் ருத்ரதாண்டவம்... அதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை" என்று போட்டிக்குப் பின்பான உரையாடலில் தெரிவித்திருக்கிறார் ஸ்டெய்ன்.

banner

Related Stories

Related Stories