விளையாட்டு

தொடர்ந்து வெல்லுமா சென்னை? வலுவான குஜராத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து வெல்லுமா சென்னை? வலுவான குஜராத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று நடைபெற இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. சென்னை அணியோ ஆடியிருக்கும் 5 போட்டிகளில் ஒன்றை மட்டுமே வென்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கும் ஒரு அணி முதல் இடத்தில் இருக்கும் ஒரு அணியை வீழ்த்தியாக வேண்டும். இது சாத்தியமா?

சென்னை அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்றிருந்தது. பெங்களூருவிற்கு எதிராக 6 வது போட்டியில் மட்டுமே வென்றிருக்கிறது. இந்த போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் ரொம்பவே சிறப்பாக இருந்தது. உத்தப்பா, சிவம் துபே இருவரும் இணைந்தே 165 ரன்களை எடுத்திருந்தனர். இருவருமே சிறப்பாக ஆடியிருந்தனர். இதனால் சென்னை அணியும் 200 ரன்களை கடந்து ஸ்கோர் செய்திருந்தது.

பௌலிங் கொஞ்சன் சுமார்தான் என்றாலும் கடந்த போட்டிகளில் சென்னை பௌலர்கள் பவர்ப்ளேயில் மோசமாக வீசியிருந்தனர். விக்கெட்டுகளே பெரிதாக கிடைக்கவில்லை. முதல் 4 போட்டிகளில் சென்னை அணி பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீசியிருந்தது. அதிலும் ஒரு விக்கெட் ரன் அவுட் மூலமாக வந்திருந்தது ஆனால், பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் பவர்ப்ளேயில் சென்னை பௌலர்கள் சிறப்பாக வீசியிருந்தனர். அந்த போட்டியில் பவர்ப்ளேயில் மட்டும் 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இந்த பெர்ஃபார்மென்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

தொடர்ந்து வெல்லுமா சென்னை? வலுவான குஜராத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

கடந்த போட்டியில் பேட்டிங்கிலும் பௌலிங் பவர்ப்ளேயிலும் என்ன செய்ததோ அதை அப்படியே இந்த போட்டியிலும் செய்தாக வேண்டும். பேட்டிங்கில் கடந்த சீசனை சென்னை அணிக்காக வென்று கொடுத்த ருத்துராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு திரும்பியே ஆக வேண்டும். மூன்று போட்டிகளுக்கு பிறகு ஃபார்முக்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டவர் ஐந்து போட்டிகளாகியும் பெரிதாக ரன்களே எடுக்காமல் இருக்கிறார். ருத்துராஜ் 30+ ஸ்கோருக்கு மேல் எடுத்த போட்டிகளில் சென்னை 90% வென்றிருக்கிறது. ஆக, இன்றைக்கு ருத்துராஜ் கெய்க்வாட் குறைந்தபட்சம் 30 ரன்களையாவது அடித்தே ஆக வேண்டும். இவரோடு உத்தப்பாவும் சிவம் துபேவும் கடந்த போட்டியின் ஃபார்மை அப்படியே தொடர வேண்டும்.

பௌலிங்கில் பவர்ப்ளேயில் கடந்த போட்டியை போல மஹீஸ் தீக்சனா விக்கெட்டுகளை எடுத்தே ஆக வேண்டும். ஏனெனில், குஜராத் அணியில் டாப் ஆர்டரில் சுப்மன் கில் ஒரு முக்கியமான வீரர். அவரின் விக்கெட்டை தூக்கிவிட்டால் மற்ற வீரர்களுக்கு கொஞ்சம் கூடுதல் அழுத்தம் கொடுக்க முடியும். சுப்மன் கில்லை வீழ்த்திய பிறகு, சென்னை அணியின் அடுத்த டார்கெட்டாக ஹர்திக் பாண்ட்யாவே இருக்க வேண்டும். ஃபினிஷர் ரோலில் இறங்கி பழக்கப்பட்டவர் இந்த சீசனில் மிடில் ஆர்டரில் இறங்கி அசத்தி வருகிறார். ஆரஞ்சு தொப்பிக்கான ரேஸிலெல்லாம் இருக்கிறார். பேட்டிங்கிக் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். இவர்கள் இருவரையும் எவ்வளவு சீக்கிரம் சென்னை அணி வீழ்த்துகிறதோ அதைப்பொறுத்தே போட்டியின் முடிவு அமையும்.

தொடர்ந்து வெல்லுமா சென்னை? வலுவான குஜராத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

ஷமியின் பவர்ப்ளே ஸ்பெல் மற்றும் ரஷித் கானின் மிடில் ஓவர்கள் சென்னை அணியின் பேட்டர்களுக்கு சவாலானதாக இருக்கக்கூடும். ருத்துராஜ் கெய்க்வாட் விக்கெட்டை விடாமல் க்ரீஸில் நின்றால் ரஷீத்கானை நன்றாக அட்டாக் செய்வார். லாக்கி ஃபெர்குசனின் வேகமும் சென்னை பேட்டர்களக் திணற செய்யலாம். இவர்கள் மூவரையும் தாண்டி மற்ற ஓவர்களை வீசப்போகும் பௌலர்களை சென்னை பேட்டர்கள் நன்றாக அட்டாக் செய்யலாம்.

இந்த போட்டியோடு சேர்த்து இன்னும் 9 போட்டிகள் சென்னை அணிக்கு மீதமிருக்கிறது. இந்த 9 போட்டிகளில் 7 போட்டிகளை சென்னை வென்றாக வேண்டும். ஏறக்குறைய Do or Die சூழலுக்கு சென்னை வந்துவிட்டது. இனியும் தாமதமில்லாமல் சீரான பெர்ஃபார்மென்ஸ்களை கொடுத்து தொடர் வெற்றிகளை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கான தொடக்கமாக இந்த குஜராத் டைட்டன்ஸ் போட்டி இருக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories