இலங்கையில் நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், டி20 ஃபார்மட்டில் போட்டிகள் நடத்த இருப்பதாகவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய கண்டங்களில் உள்ள அணிகளுக்கு இடையே நடத்தப்படும் கிரிக்கெட் தொடர் கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 50 ஓவர் மற்றும் 20 ஓவர் முறையில் 1984ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்தத் தொடரில் இந்திய அணி அதிகபட்சமாக 7 முறை வெற்றி வாகை சூடி இருக்கின்றது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு தொடர் நடத்தப்படாத நிலையில் 2021ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்பொழுதும் நோயின் தாக்கம் குறையாததால் நடப்பாண்டு போட்டியை நடத்துவது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டம் கூடி ஆலோசித்தது.
முடிவில் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடப்பாண்டு இலங்கையில் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடத்த இருப்பதாகவும், டி20 முறையிலேயே போட்டிகள் நடத்தப்படும் இருப்பதாகவும் பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா கூறியுள்ளார்.
கடைசியாக, 2018 ஆம் ஆண்டு வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இரண்டு முறை மட்டுமே 20 ஓவர் முறையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், 2018ஆம் ஆண்டு கடைசியாக 20 ஓவர் முறையில் போட்டிகள் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்க இருப்பதால் ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என தொடர்ந்து வரும் நிலையில், இந்த முறை ஆசிய கோப்பை தொடர் 20ஓவர் முறையில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.