விளையாட்டு

IPL 2021 : விஸ்வரூப கொல்கத்தாவும்.... வலிமையான டெல்லியும்... சென்னையோடு மோதப்போவது யார்?

ஐபிஎல் ப்ளே ஆஃபில் இன்று 2வது தகுதிச்சுற்று போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கொல்கத்தாவும் டெல்லியும் மோதவிருக்கின்றனர். இதில் வெல்லும் அணி சென்னை சூப்பர் கிங்ஸுடன் இறுதிப்போட்டியில் மோதும்.

IPL 2021 : விஸ்வரூப கொல்கத்தாவும்.... வலிமையான டெல்லியும்... சென்னையோடு மோதப்போவது யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டெல்லி அணியை பொறுத்தவரைக்கும் லீக் சுற்றில் 10 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து ப்ளே ஆஃப்ஸுக்கு முன்னேறியது. ப்ளே ஆஃப்ஸில் முதல் தகுதிச்சுற்றில் சென்னை அணிக்கு எதிராக நெருங்கி வந்து தோற்றிருந்தது. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்ததால் இரண்டாம் வாய்ப்பாக இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.

டெல்லி அணி கடைசியாக ஆடிய இரண்டு போட்டியிலுமே கடைசி ஓவர் வரை வந்து வெற்றியை நெருங்கி கோட்டை விட்டது. கடைசி ஓவரை யார் வீசுவது என்பதில் பெரிய குழப்பம் இருக்கிறது. பெங்களூர்க்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை ஆவேஷ் கான் வீசியிருப்பார். அந்த ஓவரின் கடைசி பந்தில் பரத் சிக்சர் அடித்து பெங்களூரு அணியை வெல்ல வைத்திருப்பார். ஆவேஷ் கான் சிறப்பான பௌலராக இருந்தாலும் டெத் ஓவர்களில் அதிகமாக ஃபுல் டாஸ் பந்துகளை வீசுகிறார். இது பல சமயங்களில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் ரபாடா, அஷ்வின் போன்றவர்களுக்கு ஓவர் இருந்த போதும் டாம் கரனிடம் கொடுக்கப்பட்டது. ரபாடாவை விட அந்த போட்டியில் டாம் கரன் சிறப்பாக வீசியிருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இதுவும் தோல்வியிலேயே முடிந்தது. தோனி மிகச்சிறப்பாக ஆட்டத்தை முடித்திருந்தார்.

IPL 2021 : விஸ்வரூப கொல்கத்தாவும்.... வலிமையான டெல்லியும்... சென்னையோடு மோதப்போவது யார்?

மேலும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டரான ஸ்டாய்னிஸ் இந்த இரண்டாம் பாதி சீசனில் ஆடாமல் இருக்கிறார். அவர் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அவர் களமிறங்கும் பட்சத்தில் பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே ஒரு சமநிலை உருவாகிவிடும். ஒரு அணியாக பார்க்கும்போது எந்த குறையும் சொல்ல முடியாத விதத்தில் டெல்லி இருக்கும்.

கொல்கத்தாவை பொறுத்தவரைக்கும் இந்த இரண்டாம் பாதி சீசனில் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இருக்கிறது. 8 போட்டிகளில் 6 இல் வென்றுள்ளது. கடைசியாக எலிமினேட்டர் சுற்றில் பெங்களூருவை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு தேர்வானது. வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில், ராகுல் திரிபாதி என டாப் ஆர்டரில் மூன்று பேட்ஸ்மேன்களும் பட்டையை கிளப்புகின்றனர். ஸ்பின்னில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஷகிப்-அல்-ஹசன் என மூன்று பேரும் மிரட்டுகின்றனர். ஃபெர்குசன் வேகப்பந்து வீச்சில் அசத்துகிறார். ஒரு அணியாக முழுமையாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அனலிஸ்ட் நேதன் லேமனின் புள்ளி விவர கணக்குகளும் கோச் மெக்கல்லமின் எதற்கும் அஞ்சாத குணாதிசயம் கொல்கத்தாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

இரண்டுமே வலுவான வீரர்களை கொண்ட அணிகள். எல்லா வீரர்களும் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார்கள் என்பதால் இந்த போட்டி அனல் பறக்கும். சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஆடப்போவது யார் என்கிற கேள்விக்கு விடையாகவும் இந்த போட்டி அமையப்போகிறது.

banner

Related Stories

Related Stories