விளையாட்டு

சமபலத்துடன் மோதும் பெங்களூரு மற்றும் கொல்கத்தா... டெல்லியுடன் மல்லுக்கட்ட போவது யார்?

கடந்த சீசனில் எலிமினேட்டர் சுற்றுக்கு சென்று கோலி ப்ளேயிங் லெவனில் 4 மாற்றங்களை செய்திருப்பார். இது பயங்கர சொதப்பலாக அமைந்தது. இந்த சீசனில் கோலி அதிலிருந்து பாடம் கற்றிருக்கிறார்.

சமபலத்துடன் மோதும் பெங்களூரு மற்றும் கொல்கத்தா... டெல்லியுடன் மல்லுக்கட்ட போவது யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஐ.பி.எல் ப்ளே ஆஃப்ஸில் இன்று எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டிக்கு தேர்வாகும்.

இந்த போட்டியை பொறுத்தவரைக்கும் கொல்கத்தா அணியை விட பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டி என சொல்லலாம். ஏனெனில் பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி இந்த சீசனோடு கேப்டன் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். அவர் கேப்டனாக செயல்படும் கடைசி சீசனில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு பெங்களூரு அணி இருக்கிறது.

அதற்கேற்ற வகையில் பெங்களூரு அணியுமே மிகச்சிறப்பாகவே ஆடி வருகிறது. லீக் சுற்றில் 14 போட்டிகளில் 9 இல் வென்று மூன்றாவது இடத்தை பிடித்து ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதிப்பெற்றிருந்தது. நூலிழையில் இரண்டாம் இடத்தை எட்டி பிடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது.

பேட்டிங்கிற்கு கோலி, படிக்கல், பரத், மேக்ஸ்வெல், டீ வில்லியர்ஸ் என 5 முக்கிய வீரர்கள் முதுகெலும்பாக இருக்கிறார்கள். மேக்ஸ்வெல் இந்த சீசனில் பெங்களூர் அணியின் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார். 14 போட்டிகளில் 498 ரன்களை அடித்திருக்கிறார். 6 அரைசதங்களை அடித்திருக்கிறார். கடந்த சீசனில் பெங்களூர் அணி மிடில் ஓவர்களில் மிகக்குறைந்த ரன்களையே எடுத்திருந்தது. இந்த சீசனில் அந்த குறையை மேக்ஸ்வெல் தீர்த்திருக்கிறார்.

சமபலத்துடன் மோதும் பெங்களூரு மற்றும் கொல்கத்தா... டெல்லியுடன் மல்லுக்கட்ட போவது யார்?

மிடில் ஓவர்களில் இந்த சீசனில் அதிக ரன்களை அடித்த பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்தான். 7-15 இந்த ஓவர்களில் ஒரு தனி ராஜ்ஜியமே நடத்தி வருகிறார். பெங்களூர் அணிக்கு நம்பர் 3 யும் பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்த சீசனிலேயே அந்த பொசிசனில் 7 மாற்றங்களை செய்திருக்கிறார்கள். ஆனால், கடைசியாக பரத் அந்த இடத்தில் கச்சிதமாக்ந் பொருந்தினார். கடைசியாக டெல்லிக்கு எதிராக ஆடிய போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருந்தார்.

கோலி, படிக்கல் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்தி ஆட வேண்டும். டீ வில்லியர்ஸ் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டும். பௌலிங்கில் ஹர்சல் படேலும், சஹாலும் மிரட்டி வருகிறார்கள். இவர்களுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் மற்றவர்கள் கொஞ்சம் கட்டுக்கோப்பாக வீசினாலே கொல்கத்தாவை ஒரு கை பார்த்துவிடலாம். ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

கடந்த சீசனில் எலிமினேட்டர் சுற்றுக்கு சென்று கோலி ப்ளேயிங் லெவனில் 4 மாற்றங்களை செய்திருப்பார். இது பயங்கர சொதப்பலாக அமைந்தது. இந்த சீசனில் கோலி அதிலிருந்து பாடம் கற்றிருக்கிறார். கடைசி 3 போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் மாற்றமே செய்யவில்லை. ப்ளே ஆஃப்ஸிலும் அதையே தொடர வேண்டும். தேவைப்பட்டால் அந்த டேன் கிறிஸ்டியன் ஸ்லாட்டில் மற்றும் ஒரு மாற்றத்தை செய்து கொள்ளலாம்.

கொல்கத்தாவை பொறுத்தவரைக்கும் இந்த இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல் பாதியில் 7 இல் 2 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்த கொல்கத்தா, இரண்டாம் பாதியில் 7 இல் 5 போட்டிகளில் வென்று மிரட்டியது. செய் அல்லது செத்து மடி என்கிற தீர்க்கத்தோடு தடுமாற்றமேயின்றி அசத்தி வருகின்றனர். வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில், ராகுல் திரிபாதி டாப் 3 யில் இருக்கும் இந்த மூவரும் தான் அந்த அணியின் பேட்டிங் பலம். மூவருமே இளைஞர்கள். ரிஸ்க் எடுத்து அதிரடியாக ஆடுவதில் கெட்டிக்காரர்கள். இவர்களை தாண்டி முழு உடற்தகுதியோடு இருக்கும்பட்சத்தில் ரஸலும் வெளுத்தெடுப்பார்.

நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் போன்றோர் இவர்களுக்கு துணை புரிவார்கள். பிரச்சனையாக இருப்பது கேப்டன் இயான் மோர்கனின் ஃபார்ம் மட்டுமே. பௌலிங்கை பொறுத்தவரைக்கும் தமிழக வீரர் வருணும் சுனில் நரைனுமே துருப்புச்சீட்டுகள். இவர்கள் வீசும் அந்த 8 ஓவர்களில் எதிரணியின் வெற்றி தோல்வியே அடங்கியிருக்கிறது. சாந்தமாக ஓடி வந்து 150 கி.மீ வேகத்தில் வீசும் ஃபெர்குசனும் ஆபத்தானவரே.

சமபலத்துடன் மோதும் பெங்களூரு மற்றும் கொல்கத்தா... டெல்லியுடன் மல்லுக்கட்ட போவது யார்?

ஷார்ஜா மற்ற மைதானங்களை விட ரொம்பவே மந்தமான தன்மை கொண்ட மைதானம். இங்கே 140 கூட வெற்றியை தேடி தரக்கூடிய ஸ்கோராக இருக்க முடியும். இதே மைதானத்தில் கொல்கத்தா கடைசியாக ஆடிய போட்டியில் சரியான திட்டமிடலுடன் 171 ரன்களை அடித்திருந்தது. இந்த சீசனில் ஷார்ஜாவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். அந்த அனுபவம் கொல்கத்தாவுக்கு கைக்கொடுக்கலாம்.

மேலும், கடைசியாக இரண்டு அணிகளும் மோதிய போட்டியில் பெங்களூருவை கொல்கத்தா 92 ரன்களில் சுருட்டியிருக்கிறது. இதையெல்லாம் வைத்து பெங்களூருவை கொல்கத்தா குறைத்தும் மதிப்பிட்டு விடக்கூடாது. இரண்டு அணிகளுமே சமபலத்துடன் சம அளவிலான சவால்களுடன் களமிறங்குகின்றனர். வெல்லப்போவது இந்திய கேப்டன் தலைமையிலான அணியா இங்கிலாந்து கேப்டன் தலைமையிலான அணியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories