விளையாட்டு

“இந்தியாவின் தங்க மகன்” : ஈட்டியால் பல சாதனைகளைத் தகர்த்தெறிந்த நீரஜ் சோப்ரா!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

“இந்தியாவின் தங்க மகன்” : ஈட்டியால் பல சாதனைகளைத் தகர்த்தெறிந்த நீரஜ் சோப்ரா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதிச் சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார்.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார்.

ஜெர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் ஆகியோர் நீரஜை பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அவர் அதிகபட்ச தூரமாக 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.

“இந்தியாவின் தங்க மகன்” : ஈட்டியால் பல சாதனைகளைத் தகர்த்தெறிந்த நீரஜ் சோப்ரா!

இதன் மூலம் தடகளப் போட்டியில் ஒலிம்பிக் களத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.

நீரஜ் சோப்ரா அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, முதல் முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மேலும், மொத்த பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் புதிய வரலாறு படைத்துள்ளது இந்தியா.

banner

Related Stories

Related Stories