ஓட்டப்பந்தய ராணி பி.டி.உஷா
பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற இந்திய தடகள வீராங்கனை. 1985, 1986ல் நடந்த உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் வீராங்கனைகளில் ஒருவராக இருந்தார். இந்த சாதனையை இதற்கு முன்பும், பின்பும் வேற எந்த இந்தியரும் நடத்தியதில்லை. சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த இவரை “இந்திய தடகளங்களின் அரசி” எனும், ‘இந்தியாவின் தங்க மங்கை’ என்றும், “பய்யொலி எக்ஸ்பிரஸ்” என்றும் கூறுவார்கள்.
தனது அதிவேக ஓட்டம் மூலமாக விளையாட்டுத் துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்து, இந்தியத் தடகள விளையாட்டுகளில் மிகப்பெரிய சாதனையாளர்களில் ஒருவரா கருதப்படும் பி. டி. உஷாவை பற்றிய சில விஷயங்கள் பாக்கலாம்.
பி.டி.உஷா தேசிய அளவில் பல தடகளப் போட்டிகளில் பங்கேற்ற்உ, பதக்கங்களையும், பலரது பாரட்டுகளையும் பெற்று, சர்வதேச அளவில் கால் பதித்தார். 1980ல் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக சர்வதேச அளவில் பங்கேற்றார். இந்தப் போட்டியில பதக்க வாய்ப்பை இழந்தாலும், அதன் பின் 1982ல் டெல்லியில நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதுதான் அவரின் முதல் சர்வதேச பதக்கம்.
அடுத்து குவைத்தில் நடந்த சாம்பியன் தடகளப் போட்டியில 400 மீட்டர் ஓட்டத்தில் ‘தங்கம்’ வென்று புது சாதனை படைத்திருந்தார். அதனையடுத்து 1984ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 23வது ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில், அரையிறுதியில் முதலாவதாக வந்தாலும், இறுதி ஓட்டத்தில் 100ல் ஒரு நொடி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்தார். இருப்பினும், ஒலிம்பிக் போட்டியில் இறுதிபோட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றது மட்டுல்லாமல், ஓட்டப் பந்தயத்தில் அவர்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார்.
1986ல் சியோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என்று எல்லாவற்றிலும் முழு ஆதிக்கம் செலுத்தி, தங்கம் வென்றது மட்டுல்லாமம், ஒரு வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியிருந்தார். அதன் பிறகு, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கொடிகட்டிப் பறந்த பி.டி.உஷாவுக்கு “ஆசிய தடகள ராணி” என்ற பட்டம் சூட்டப்பட்டது. 1983 முதல் 1989 வரைக்கும் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்ற அவர், சுமார் 13 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.