விளையாட்டு

“தோனி ஏற்காவிட்டாலும் அவருக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த தயார்” - பிசிசிஐ மூத்த அதிகாரி தகவல்!

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு பிரியாவிடை போட்டி நடத்த தயார் என பிசிசிஐ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

“தோனி ஏற்காவிட்டாலும் அவருக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த தயார்” - பிசிசிஐ மூத்த அதிகாரி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையேவும் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்களிடையேவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த தோனியை சிறப்பித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் பெருமளவில் வைரலாக்கப்பட்டன.

“தோனி ஏற்காவிட்டாலும் அவருக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த தயார்” - பிசிசிஐ மூத்த அதிகாரி தகவல்!

மேலும் இத்தனை சிறப்புகளையும் பெற்றுத் தந்த தோனிக்கு பிரியாவிடையாக ஒரு ஃபேர்வெல் போட்டி நடத்தவும் ரசிகர்களும் கிரிக்கெட் வீரரகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள பிசிசிஐயின் மூத்த அதிகாரி யாரும் எதிர்பாராத நேரத்தில் தோனி தனது ஓய்வை அறிவித்துவிட்டார். இப்போதைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இந்திய அணிக்கி இல்லை.

ஆனால், ஐபிஎல் முடிந்த பிறகு தோனிக்கான உரிய கவுரவம் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். அவருக்கு ஃபேர்வெல் போட்டி ஒன்று நடத்தப்பட வேண்டும். அவர் ஏற்கவே இல்லையென்றாலும் முறைப்படி மரியாதை வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories