இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனையும், T20 போட்டிகளில் முன்னாள் கேப்டனாகவும் இருந்த மிதாலி ராஜ் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
அனைத்து வகையான T20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய மகளிர் அணி வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளதாக பிசிசிஐ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்திய மகளிர் அணிக்காக T20 போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ், சர்வதேச T20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மிதாலி பெற்றுள்ளார்.
2012, 2014 மற்றும் 2016 ஆகிய 3 டி20 உலகக்கோப்பை போட்டிகள் உட்பட இதுவரை 32 20 ஓவர் போட்டிகளில் மிதாலி ராஜ் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
ஓய்வு தொடர்பாக பேசிய மிதாலி ராஜ், 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இருப்பதால் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவுக்கு உலகக்கோப்பையைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே எனது கனவு. அதற்காக கடுமையாக விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.