விளையாட்டு

IPL 2019;ரசலின் அதிரடியால் பெங்களூருவை வீழ்த்தியது கொல்கத்தா 

நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற கொல்கத்தா அணி பெங்களூர் அணியை பேட் செய்ய பனித்தது.

Kolkatta Knight Riders
Kolkatta Knight Riders
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் மார்ச் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற கொல்கத்தா அணி பெங்களூர் அணியை பேட் செய்ய பனித்தது.

இதையடுத்து,பார்திவ் பட்டேலும் ,விராட் கோஹ்லியும் களமிறங்கினார்கள்.இருவரும் பெங்களுரு அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடியாக விளையாடிய பார்த்திவ் படேல் 25 ரன்னில் நிதீஸ் ராணா பந்தில் அவுட் ஆகினார்.

அதை தொடர்ந்து களம் இறங்கிய டி வில்லியர்ஸ் வீராட் கோலியுடன் சேர்ந்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சை நொருக்கினர். அதிரடியாக விளையாடிய வீராட் கோலி அரைசதம் கடந்தார். இந்த போட்டியில் வீராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.

Virat Kohli
Virat Kohli

மறுமுனையில் டி வில்லியர்ஸ் அதிரடியாக அரைசதம் வீளாசினார். நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய வீராட் கோலி 84 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் மார்கஸ் ஸ்டோனிஸ் நிலைத்து விளையாட மறுமுனையில் டி வில்லியர்ஸ் 63 ரன்னில் நரைன் பந்தில் அவுட் ஆகினார். ஸ்டோனிஸ் அதிரடியாக 28 ரன்கள் எடுக்க பெங்களுரு அணி 20 ஓவர்கள் 205 ரன்களை குவித்தது.

அதை தொடர்ந்து களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் லிண் மற்றும் சுனில் நரைன் இருவரும் விளையாடினர். வந்த வேகத்தில் சுனில் நரைன் 10 ரன்னில் சைனி பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ராபின் உத்தாப்பா அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

Chris Lynn
Chris Lynn

ராபின் உத்தாப்பா 33 ரன்னில் பவண் நெகி பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய கிறிஸ் லிண் 43 ரன்கள் அடித்து நெகி பந்தில் அவுட் ஆகினார்.இதை தொடர்ந்து களம் இறங்கிய நிதிஸ் ராணா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் விளையாடினர். ராணா 37 ரன்னில் சஹால் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்னில் சைனி பந்தில் அவுட் ஆகினார்.

Andre Rusell
Andre Rusell

அடுத்து களம் இறங்கிய அதிரடி வீரர் ரஸல் 18 பந்தில் 52 ரன்கள் தேவைபட்ட நிலையில் இரண்டு முறை ஹாட் ரிக் சிக்ஸர்களை வீளாசினார். ரஸல் 13 பந்தில் 48 ரன்களை எடுத்து கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்தார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஆன்ரே ரஸல் தேர்வு செய்யப்பட்டார்.

banner

Related Stories

Related Stories