ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது.
போட்டியின் 13-வது ஓவரை அஸ்வின் வீசியபோது நான்-ஸ்ட்ரைக்கில் நின்றிருந்த ஜோஸ் பட்லர், பந்துவீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேறியதால் சாமர்த்திமாக செயல்பட்ட அஸ்வின், அவரை ரன்-அவுட் செய்தார். ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அஸ்வின் அவுட்டாக்கியது சரியா தவறா என கிரிக்கெட் ஜாம்பவான்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரித்துள்ளனர்.
2.5 ஓவரை அஸ்வின் வீசிய போது, நான்-ஸ்ட்ரைக்கர் எல்லைக் கோட்டில் இருந்த ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர், க்ரீஸை விட்டு வெளியே இருந்ததால், அவரை “மன்கட் அவுட்”(ரன்அவுட்) செய்தார் அஸ்வின். இது மூன்றாவது நடுவருக்குச் சென்றபோது, சிலநிமிடங்கள் அஸ்வினுக்கும், பட்லருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அசிங்கமானது. இதில் பட்லர் ஆட்டமிழந்து வெளியேறினார். பட்லர் சென்ற பின் ஆட்டம் தலைகீழாகி ராஜஸ்தான் அணி தோற்றது. தான் ஆட்டமிழந்தவுடன் ஜோஸ் பட்லர் மிகுந்த கோபத்துடன் சத்தம்போட்டபடி வெளியேறினார்.
கிரிக்கெட் விதிமுறைப்படி பார்த்தால், ஐசிசி விதி 41.16-ன்கீழ், பந்துவீச்சாளர் பந்தை வீசுவதற்கான செயலை(ஆக்ஸன்) செய்துவிட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்-ஸ்டிரைக்கர் தன்னுடைய இடம் அதாவது க்ரீஸில்(எல்லைக்கோடு)இருந்து வெளியே இருந்தால், பந்துவீச்சாளர் அந்த நான்-ஸ்டிரைக்கரை ஆட்டமிழக்கச் செய்யலாம் என்று இருக்கிறது.ஆனால், நேற்று அஸ்வின் பந்துவீசும் தனது செயலை செய்யும் முன்பே, பட்லரை கோட்டை விட்டு வெளியே சென்றவுடன் ஆட்டமிழக்கச் செய்துவிட்டார். இங்குதான் விவாதப்பொருளாகி இருக்கிறது.
இதுபோன்று “மன்கட்” அவுட் செய்யும் முன், பந்துவீச்சாளர் பேட்ஸ்மேனிடம் எச்சரிக்கை செய்வார், க்ரீஸை விட்டு பந்துவீசும் முன் வெளியேவராதீர்கள் என்று நடுவர் முன்னிலையில் எச்சரிக்கை செய்து, அதன்பின் மீண்டும் அதே தவறைச் பேட்ஸ்மேன் செய்தால், அவுட் செய்யப்படுவார். இது கிரிக்கெட் உலகில் ‘மன்கடட்’ என்று கூறப்படும்.
ஜோஸ் பட்லர் க்ரீஸை விட்டு வெளியே செல்வதைப் பார்த்தவுடன் எச்சரிக்கை செய்துவிட்டு, மீண்டும் அந்தத் தவறை பட்லர் செய்து அஸ்வின் அப்போது மான்காட் அவுட் செய்திருந்தால், விவாதத்துக்கு இடமில்லை. ஆனால், அதைவிடுத்து வெற்றி வெறி பிடித்து அஸ்வின் செய்தது கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த நட்புணர்வு தாத்பரியத்தை குலைக்கும் வகையில் இருந்தது.
2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இதேபோல் பட்லர் கிரீஸை விட்டு வெளியே சென்றபோது, இலங்கை பந்துவீச்சாளர் சேனநாயகே முதல் முறை எச்சரி்க்கை செய்து, 2-வது முறையாக பட்லர் வெளியே சென்றபோதுதான் மான்காட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது இது விவாதிக்கப்படவில்லை.
இப்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அஸ்வின் செயல்பாடு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் கிடைக்கும் வெற்றியும், தோல்வியும் ஐசிசியால் அங்கீகரிக்கப்படுவதும் இல்லை, ஒருவீரரின் சாதனைகளில் இடம் பெறப் போவதும் இல்லை.அப்படிப்பட்ட வெற்றி அஸ்வினுக்கு தேவையா.
விதிப்படிதான் செயல்பட்டார் அஸ்வின் என்று வாதத்தை முன்வைக்கலாம், விதிக்காக விளையாடப்படுவதல்ல கிரிக்கெட், கிரிக்கெட்டில் வகுத்த விதிகளை எவ்வளவு ஜென்டில்மேனாக பின்பற்றுகிறோம், நட்புறவுகளை பேணுகிறோம் என்பதில்தான் இருக்கிறது கிரிக்கெட்டின் ஸ்பிரிட். ஏற்றுக்கொள்வது