அரசியல்

மகாராஷ்டிரா பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை! : வெற்று நம்பிக்கை விதைக்கும் வாக்குறுதிகளா?

மகாராஷ்டிரா பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை! : வெற்று நம்பிக்கை விதைக்கும் வாக்குறுதிகளா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல், ஒன்றியத்தில் ஆட்சி புரியும் பா.ஜ.க, இதுவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட, சொல்லாத அடக்குமுறைகளை கட்டவிழ்க்கும் நடவடிக்கைகளை தான் அதிக அளவில் அரங்கேற்றி வருகிறது.

அதற்கு, மாநிலங்களுக்கான உரிமை வழங்கல், தமிழ்நாடு மீனவர் சிக்கல்களுக்கு முட்டுக்கட்டை, நாட்டின் கடன் ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய பொய் பிரச்சாரங்களும், மாநில உரிமை சுரண்டல், மீனவர் சிக்கல்களை கண்டுகொள்ளாமை, விவசாயிகள் வஞ்சிப்பு, வேலைவாய்ப்புகளை அழித்தல், மொழித்திணிப்பு, சட்டங்களில் மாற்றம் போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளும் தான் எடுத்துக்காட்டுகளாய் அமைந்துள்ளன.

அவ்வாறு, கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் நம்பிக்கையை அபகரிக்க, பா.ஜ.க.வால் உருவாக்கப்பட்டு வரும் தேர்தல் வாக்குறுதிகளை தான், எதிர்வரும் நவம்பர் 20ஆம் நாள் நடக்க இருக்கும் மகாராஷ்டிரா தேர்தலுக்கும் செயல்முறைப் படுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க வாக்குறுதிகளாக பணவீக்கத்திலிருந்து விலக்கு, 10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை, 25 லட்சம் வேலைவாய்ப்புகள், வீட்டு மின்சார கட்டணம் 30% குறைப்பு, உள்ளிட்ட 25 வாக்குறுதிகள் அமைந்துள்ளன.

மகாராஷ்டிரா பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை! : வெற்று நம்பிக்கை விதைக்கும் வாக்குறுதிகளா?

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்திலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக அசாமிலும், 7 ஆண்டுகளை கடந்து உத்தரப் பிரதேசத்திலும் ஆட்சி புரியும் பா.ஜ.க, அம்மாநிலங்களுக்கு செய்தது என்ன? என்றால், சிறுபான்மையினர் வஞ்சிப்பு, ஆயிரக்கணக்கான வீடுகள் இடிப்பு, குடியுரிமை பறிப்பு, கலவரங்கள், மத அரசியல் நடவடிக்கைகள் மட்டுமே.

குறிப்பாக கால் நூற்றாண்டிற்கும் மேலாக குஜராத் மாநிலத்தில் ஆட்சி புரியும் பா.ஜ.க, இதுவரை ஒற்றை மருத்துவ கல்லூரிகளைக் கூட அங்கு நிறுவவில்லை. தேசிய மாநாடுகள் நடத்தப்படும் போது, குடிசைப்பகுதிகள் பச்சை நிற திரையால் மறைக்கப்படுகிறதே தவிர, குடிசைகள் இல்லா மாநிலம் உருவாகவில்லை. குடிசைகள் இல்லா நாடு உருவாகும் என்பதும், பா.ஜ.க.வின் வாக்குறுதியே.

இவை ஒரு புறம் இருக்க, சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவிற்கு கிடைக்க இருந்த முதலீடுகளை, குஜராத்திற்கு மாற்றமடைய செய்ததும் பா.ஜ.க தான்.

மகாராஷ்டிரா பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை! : வெற்று நம்பிக்கை விதைக்கும் வாக்குறுதிகளா?

கூட்டணியில் ஆட்சி அமைத்திருக்கும் பொழுதே, மகராஷ்டிராவின் முதலீடுகளை அபகரித்து வரும் பா.ஜ.க, எவ்வாறு அம்மாநில மக்களுக்கான வேலையை செய்யும், வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஒன்றியத்தில் ஆட்சியமைத்து, வேலைவாய்ப்பின்மையையும், விலைவாசியையும் அதிகரித்துவிட்டு, அதிலிருந்து மகராஷ்டிரா மீட்கப்படும் என பா.ஜ.க.வே முன்மொழிவது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் அமைந்துள்ளது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories