அரசியல்

இனி திரைப்படங்களில் நடிக்கக் கூடாது : ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபிக்கு தடை விதித்த மோடி !

இனி திரைப்படங்களில் நடிக்கக் கூடாது : ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபிக்கு தடை விதித்த மோடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஏராளமான அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. பாஜகவின் முக்கிய தலைவர்களுக்குகூட இணையமைச்சர் பதவியே ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் கேரளாவில் இருந்து வெற்றிபெற்ற நடிகர் சுரேஷ் கோபி நேற்று ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து மலையாள ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், தனக்கு அமைச்சராக தொடர்வதில் விருப்பம் இல்லை என்றும் தான் தொடர்ந்து நடிக்கவிரும்புவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "தனக்கு அமைச்சர் பதவியில் விரும்பம் இல்லை என்று முன்னரே கட்சித் தலைமையிடம் முன்கூட்டியே கூறியிருந்தேன். எனினும் கட்சித் தலைமை கூறியதால் மட்டுமே பதவியேற்றுக் கொண்டேன்.

எனக்கு கோரிக்கையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து என்னை கட்சித் தலைமை விடுவிக்கும் என்று நம்புகிறேன். நான் ஏற்கனவே படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதால் அதனை தொடர விரும்புகிறேன். எம்.பி.யாக திருச்சூர் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று கூறினார்.

இனி திரைப்படங்களில் நடிக்கக் கூடாது : ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபிக்கு தடை விதித்த மோடி !

எனினும் அவரின் கோரிக்கையை பாஜக மேலிடம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், தொடர்ந்து ஒன்றிய இணையமைச்சராக சுரேஷ் கோபி செயல்பட்டார். ஆனால் அவர் தன்னை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், சுரேஷ் கோபி இனி திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என பிரதமர் மோடி கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சுரேஷ் கோபி ஆச்சேபம் தெரிவித்தாலும் வேறு வழியின்றி அவர் அமைச்சர் பதவியில் தொடரவுள்ளதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories