அரசியல்

உடனடியாக ரூ.1.57 கோடி GST கட்டுங்க - திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் !

உடனடியாக ரூ.1.57 கோடி GST கட்டுங்க - திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.

தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. மேலும் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விளையும் அதிகளவில் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், பிரபலமான திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு சார்பில் அனுப்பட்ட ஜி.எஸ்.டி. நோட்டீசில கோவில் வருமானத்துக்காக 1.57 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.

உடனடியாக ரூ.1.57 கோடி GST கட்டுங்க - திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் !

கோயில் சொத்துக்களின் வாடகை, சிற்பங்கள், இதர பொருள்களின் விற்பனை, கோயில் யானைகளை வாடகைக்கு விடுவது போன்ற வருவாய்க்கு 1.57 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் 100% அபராதம், 18% வட்டி செலுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. '

அதே நேரம் முறையான கணக்குகள் படி 16 லட்சம் ரூபாய்தான் செலுத்த வேண்டும். அதில்3 லட்சம் ரூபாய் ஏற்கனவே செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. கோவில் வருமானத்துக்கு கூட ஜி.எஸ்.டி. கட்டவேண்டும் என்றும் ஒன்றிய நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய அரசின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories