அரசியல்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் - நவம்பர் 6 முதல் தேர்தல் பிரச்சாரம்! : இந்தியா கூட்டணி அறிவிப்பு!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் - நவம்பர் 6 முதல் தேர்தல் பிரச்சாரம்! : இந்தியா கூட்டணி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

2024 மக்களவை தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கப்பெற்ற பெரும் ஆதரவை அடுத்து, அம்மாநில சட்டமன்றத் தேர்தலின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

பா.ஜ.க தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி வகிக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கின்ற நிலையிலும், NDA கூட்டணி ஆட்சியில் மகாராஷ்டிரா இழந்த முதலீடுகள், மேலாண்மையில் தேக்கம், சிறுபான்மையினர் வஞ்சிப்பு, முதலாளிக்கு ஆதரவான நடவடிக்கைகள் உள்ளிட்டவை அரங்கேறியுள்ளதால், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகியுள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிரா இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், சிவசேனா (தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் பெரும்பான்மை மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதால், மாநிலத்தின் பெருவாரியான தொகுதிகளை இம்மூன்று கட்சிகள் பங்கிட்டுகொண்டன.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் - நவம்பர் 6 முதல் தேர்தல் பிரச்சாரம்! : இந்தியா கூட்டணி அறிவிப்பு!

காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களிலும், சிவசேனா (தாக்கரே) 96 இடங்களிலும் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 87 இடங்களிலும் போட்டியிடுகின்றன. சுமார் 76 தொகுதிகள் காங்கிரசும், பா.ஜ.க.வும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நிறைவுற்று, வரும் நவம்பர் 20ஆம் நாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவம்பர் 23ஆம் நாள் தேர்தல் முடிவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், வருகிற நவம்பர் 6ஆம் நாள் முதல் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்குவதாகவும், தேர்தல் வாக்குறுதியை பிரச்சாரத் தொடக்கத்தில் தெரிவிப்பதாகவும், இந்தியா கூட்டணியின் சார்பில் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories