அரசியல்

மும்பை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 9 பேர் காயம்! : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!

மும்பை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 9 பேர் காயம்! : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மும்பை மாநகரின் பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 9 பேர் காயமடைந்துள்ளனர். ரயில்வே துறையின் கீழ் நடைபெறும் பல்வேறு இடர்களுக்கு, இச்சம்பவம் மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் திறப்புவிழாக்களும், ஆரம்பர விளம்பரங்களும் மட்டுமே வெற்றிபெருகின்றன. வளர்ச்சியும், கட்டமைப்பு முன்னேற்றமும் தோல்வியடைந்தே வருகிறது.

அதற்கான அண்மை எடுத்துக்காட்டாகவே, பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அமைந்துள்ளது. பெரும் பாலங்களும், நடைமேடைகளும், சிலைகளும் கண்ணைக்கவரும் வகையில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டாலும், அதன் ஆயுள் காலம் சில மாதங்களாகவே இருக்கிறது.

மும்பை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 9 பேர் காயம்! : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!

இதற்கு ஒன்றிய பா.ஜ.க பொது இடங்களை பராமரிக்கத்தவறுவதே காரணம். ஒன்றிய பா.ஜ.க.வின் அலட்சியத்தால், மகாராஷ்டிர மாநிலத்தில் பல கோடி செலவில் கட்டப்பட்ட சத்திரபதி சிவாஜி சிலை, 9 மாதங்களில் தரைமட்டமானது.

இதே நிலை தான், பா.ஜ.க ஆட்சியில் எழுப்பப்பட்ட மற்ற கட்டமைப்புகளுக்கும். இது போன்ற நிலை இந்தியாவில் நீடிப்பது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு தான் ஆபத்தாக முடியும்.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உலக தரம் வாய்ந்த கட்டமைப்புகள் எழுப்பப்பட வேண்டும். அது தான், இன்றைய தேவையாகவும் அமைந்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories