அரசியல்

"அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் !

"அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதில், கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை டிஜிபி தலைமையிலான மாநில குழுவிடம் மனு அளித்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

இதே குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை உரிய ஆய்வு செய்தே மாநில அளவிலான குழு, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக பரிந்துரை செய்தது என்றும் கூறியுள்ளார்.

மேலும், அது தொடர்பான கோப்புகளை தமிழ்நாடு முதலமைச்சருக்குஅனுப்பபப்பட்டதாகவும், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கி தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார்.ஆனால் ஆளுநர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்துவிட்டதாகவும், இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனவும் தனது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

"அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் !

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டப்பட்டவர் என்றும், ஆளுநர் அதை மீற முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இதில், ஆளுநருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை இல்லை எனக் கூறி, முன் கூட்டியே விடுதலை செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் ஆளுநர் பரிசீலிக்க உத்தரவிட்டு, அதுவரை மனு தாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories