அரசியல்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தவறான குற்றச்சாட்டை கூறக்கூடாது - சீமானுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் !

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தவறான குற்றச்சாட்டை கூறக்கூடாது - சீமானுக்கு  டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான், திராவிட மாடல் அரசின் நிர்வாகத் தோல்விக் காரணமாக மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று ஓர் அறிக்கை வெளியிட்ட நிலையில் அது தவறான தகவல் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் :

தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக பெரும் மழை பெய்து வருகிறது. சென்னை மாநகரிலும் நேற்று முதல் மழை விட்டுவிட்டு பெய்கிறது. வானிலை ஆராய்ச்சியாளர்களின் அறிவுரைகளின்படி பெரும் மழையை எதிர்பார்த்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்குபெற்ற ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். அதுபோலவே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மாநகரில் வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் விழிப்புடன் செயல்பட்டு மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சரால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுக்கும் கடந்தகாலங்களை நினைவில் கொண்டு விழிப்புடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டு, அனைத்து நிலையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக கோவை, மதுரை, சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை கரூர் உள்ளிட்ட மாநகரங்களில் தொடர்ந்து கடுமையான அளவில் மழை பெய்து ஆங்காங்கே போக்குவரத்துகளுக்கு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. எனினும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக தேவைப்படும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு மக்களை பாதுகாத்து வருகின்றனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தவறான குற்றச்சாட்டை கூறக்கூடாது - சீமானுக்கு  டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் !

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான், திராவிட மாடல் அரசின் நிர்வாகத் தோல்விக் காரணமாக மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அரசு 2021 மே திங்கள் 7-ஆம் நாள் பதவியேற்றது முதல் ஓய்வின்றி தொடர்ந்து விழிப்புடன் அனைத்து வகையிலும் செயல்பட்டு வருவதன் காரணமாக இந்தியாவில் சிறந்த மாநிலம், சிறந்த நிர்வாக அமைப்புள்ள மாநிலம், சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் என்றெல்லாம் ஒன்றிய அரசின் அமைப்புகளே பலமுறை பாராட்டியுள்ளது சீமானுக்கு தெரியும். எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திராவிட மாடல் அரசின் நிர்வாகத்தை குறை கூறுவது ஏற்புடையதல்ல. மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு, தமிழ்நாடு முழுவதிலும், வடிகால்களும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும், தூர்வாரப்பட்டுள்ளன.

பருவகாலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கனமழை பெய்வதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை களைவதற்காக மாவட்ட நிர்வாகமும் அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்படும் பகுதிகளில் உடனுக்குடன் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை மாநகரில் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு அங்கு வரும் தகவல்கள் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கமாகும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தவறான குற்றச்சாட்டை கூறக்கூடாது - சீமானுக்கு  டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் !

சிவகங்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்க பணியாளர் இல்லையென பொதுமக்கள் வேதனைப்படுவதாக தெரிவித்துள்ளார். இது தவறான குற்றச்சாட்டாகும். அங்கே பணியாளர்கள் சுழற்சி முறையில், 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள் என்பதுதான் உண்மையாகும். சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தில் பேரிடர்கால அவசர உதவிக்கு 1077 என்ற TollL Free எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மாவட்ட நிர்வாகம் சார்பாக 04575-246233 என்ற எண்ணுடன் வாட்ஸ் அப் எண் 8903331077 என்ற எண்ணும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்களில் எதாவது ஒன்றை தொடர்பு கொண்டு தங்கள் பாதிப்புகளை தெரிவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் ஆளில்லை என்று பொதுப்படையாக குற்றச்சாட்டைக் கூறுவது உண்மைக்குமாறானதாகும். அரசு எந்திரம் ஒரு நொடி கூட ஓய்வில்லாமல் மக்களைப் பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடும். இதில் யாருக்கும் அய்யம் தேவையில்லை. எனவே, அவசர மழை வெள்ளக் காலங்களில்

அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டியது அவசியமாகும். திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்ததுடன், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் உடனுக்குடன் செயல்பட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு. மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி மக்களைப் பாதுகாத்துள்ளனர் என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது, பொதுமக்களிடம் தேவையற்ற வதந்திகளை பரப்பி, அதன் மூலம் வெற்று விளம்பரத்தை தேடுவதைவிட மக்களுடன் மக்களாக நின்று உதவி செய்வதே சிறந்த மக்கள் தொண்டாகும். அவசர காலங்களில் குற்றச்சாட்டுகளை கூறுவதை விட ஒத்துழைப்பு நல்கி உதவி செய்திட வேண்டியது அனைவருக்கும் கடமையாகும்.

banner

Related Stories

Related Stories