அரசியல்

அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லுமுல்லு! : காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

அரியானாவின் உச்சானா கலாம் தொகுதியில் 32 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தியுள்ளார் பா.ஜ.க வேட்பாளர் தேவேந்திர சதார்.

அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லுமுல்லு! : காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய அளவில் அரியானா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய பகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று, அதன் முடிவுகள் இன்று (அக்டோபர் 8) வெளியாகியுள்ளது.

இரு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கு பின்னான கருத்துக்கணிப்புகளும், வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் வெளியான முன்னிலை நிலவரங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவான முன்மொழிவையே வெளிப்படுத்திய நிலையில், அரியானாவின் இறுதி முடிவு அதிர்ச்சியளிப்பதாய் அமைந்துள்ளது.

கணிப்புகளின் படியும், முன்னிலை நிலவரம் படியும் காங்கிரஸ் கூட்டணி, ஜம்மு - காஷ்மீரில் அபார வெற்றியைப் பதிவு செய்திருப்பினும், அரியானாவில் காங்கிரஸ் கூட்டணியை விட, பா.ஜ.க அதிக இடங்களைக் கைப்பற்றியது என்ற வாக்கு எண்ணிக்கை முடிவு குழப்பத்தை ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளது.

அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லுமுல்லு! : காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

குறிப்பாக, அரியானாவின் உச்சானா கலாம் தொகுதியில் 32 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தியுள்ளார் பா.ஜ.க வேட்பாளர் தேவேந்திர சதார். மேலும், ராய், சஃபிடான், தாத்ரி, மகேந்திரகர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கண்டிருக்கிறது பா.ஜ.க. இதனால், தேர்தல் முடிவுகளின் மீது கூடுதல் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “அரியானாவில் குறைந்தது மூன்று மாவட்டங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிக தாமதமாக நடைபெற்றது. இது குறித்து விரிவான புகார் ஓரிரு நாட்களில் வழங்கப்படும். மக்களின் பிரதிபலிப்புக்கு மாறாக முடிவுகள் வந்துள்ளன. முறைகேடுகளுக்கு கிடைத்த வெற்றி இது. ஜனநாயக நடைமுறைகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories