அரசியல்

சென்னை மெட்ரோ நிதி : வழக்கம் போல வதந்தி பரப்பிய பாஜக கும்பல்... அம்பலப்படுத்திய TN Fact Check !

பாஜகவினர் பரப்பிய வதந்தியை தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அம்பலப்படுத்தியுள்ளது.

சென்னை மெட்ரோ நிதி : வழக்கம் போல வதந்தி பரப்பிய பாஜக கும்பல்... அம்பலப்படுத்திய TN Fact Check !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உருவாக்கப்பட்டு சென்னையின் முதற்கட்டப் மெட்ரோ பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரூ.63,246 கோடி செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் அனுமதியும் இதற்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2021-22 நிதிநிலை அறிக்கையில் சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒன்றிய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், ஒன்றிய அரசு சென்னை மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்காத நிலையில், தமிழ்நாடு அரசே முழு செலவையும் ஏற்றுக்கொண்டு மெட்ரோ பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சென்னை மெட்ரோ நிதி : வழக்கம் போல வதந்தி பரப்பிய பாஜக கும்பல்... அம்பலப்படுத்திய TN Fact Check !

அதோடு ஒன்றிய அரசிடம் மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு ரூ. 7,425 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இந்த திட்டத்துக்கு கொடுப்பதாக சொன்ன தொகையில் சிறிய பங்கை மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள நிலையில் பாஜகவினர் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு ரூ.63,246 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ததாக வழக்கம் போல தங்கல் வதந்தியை பரப்பியுள்ளனர்.

சென்னை மெட்ரோ நிதி : வழக்கம் போல வதந்தி பரப்பிய பாஜக கும்பல்... அம்பலப்படுத்திய TN Fact Check !

அதிலும் இந்த தகவலை பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி, சூர்யாவே தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் இந்த தகவல் பொய்யானது என்பதை தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அம்பலப்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள பதிவில்,"சென்னை மெட்ரோ திட்டம் இரண்டாம் கட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளதாக" பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இது தவறான தகவல். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்காக ஒன்றிய அரசு தரப்பில் ரூ.7,425 கோடி, தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ.22,228 கோடியும், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்திரவாதத்தில் கடனாக ரூ.33,593 கோடியும் பெறப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories