அரசியல்

“ஆதவ் அர்ஜுனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து, அது விசிகவுக்கு ஏற்புடையதல்ல” - வன்னியரசு விளக்கம் !

 “ஆதவ் அர்ஜுனின் கருத்து  அவரின் தனிப்பட்ட கருத்து, அது விசிகவுக்கு ஏற்புடையதல்ல” - வன்னியரசு விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா என்பவர் துணை முதல்வர் குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களைத் தெரிவித்தார். இது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கருத்து தெரிவித்த திமுக துணை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, “ இடதுசாரி சிந்தனையை தீர்க்கமான ஆழ்ந்த நம்பிக்கை உள்ள தமிழ் மொழி வரலாற்று பின்னணியோடு கூடிய அரசியல் புரிதல் உள்ள திருமாவளவன், நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார்.

நிச்சயமாக இந்த கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுப்பார். இப்படிப்பட்ட கருத்துக்களை கூறியவர்களை அனுமதிக்க மாட்டார். போதுமான புரிதல் இன்றி வி.சி.க இயக்கத்திற்கு புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, திருமாவின் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

பகுத்தறிவு, சமூக நீதிக் கொள்கை, மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கை, தலித் அரசியலை முன்னெடுத்து, சனாதன தர்மத்திற்கு எதிரான கொள்கைகளை திருமா முழங்குகின்றார். அவர் இந்த கருத்துக்களை ஏற்க மாட்டார், அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று தி.மு.க நம்புகிறது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, “ துணை முதல்வர் குறித்த ஆதவ் அர்ஜுனின் கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்புடையதல்ல. தனி நபர் மீதான் விமர்சனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்மொழியாது. ஆதவ் அர்ஜுனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்” என்று தெரிவித்தார். இதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories