அரசியல்

”அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான கருத்துக்களை பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

”அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறி வரும் கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையே இந்திய அரசியலமைப்பில் பிரதானமான மதச்சார்பின்மை, ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியானது என்றும் இதனால் இந்தியாவிற்கு மதச்சார்பின்மை தேவையற்றது என ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆளுநரின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள சமூக வலைதளப்பதிவில், அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவியேற்றுக்கொண்டு, தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவிப்பது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல் என அவர் சாடியுள்ளார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ளமுடியாதது என்றும் இதனால் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் அவரை ஆளுநர் பதவியிலிருந்து ஒன்றிய அரசு நீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி எதனைச் செய்ய விரும்புகிறாரோ அதனையே ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதிபலித்து வருவதாக ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories