அரசியல்

எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையை ஏற்படுத்தும் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் : திருமாவளவன் குற்றச்சாட்டு!

‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் வழி, இந்திய அரசியலமைப்பை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையை ஏற்படுத்தும் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் : திருமாவளவன் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியது முதல், குற்றவியல் சட்டத்திருத்தம், புதிய கல்விக்கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம் என பா.ஜ.க முன்னெடுக்கிற நடவடிக்கைகள் அனைத்தும், இந்திய கூட்டாட்சியை சிதைக்கும் நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளன.

அவ்வகையில், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரே தேர்தல் என்ற முன்மொழிவு, மாநிலங்களுக்கான உரிமையையும், எதிர்க்கட்சிகளின் அவை வலுமையையும் சிதைக்கும் வரையறைகளைப் பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையை ஏற்படுத்தும் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் : திருமாவளவன் குற்றச்சாட்டு!

இது குறித்து, ஏற்கனவே தேசிய தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை முன்வைத்த நிலையில், விருதுநகரில் பேசிய வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பா.ஜ.க.வின் அரசியல் செயல் திட்டங்களில் ஒன்று.

இது மிகவும் ஆபத்தானது, குடியரசுத் தலைவரின் ஆட்சி முறையை கொண்டுவர பா.ஜ.க நினைக்கிறது. எதிர்கட்சிகளே இல்லாத தேசத்தையும் ஒரு கட்சி ஒரு ஆட்சி என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுகிறார்கள்” என்ற கண்டனத்தை முன்வைத்தார்.

banner

Related Stories

Related Stories