அரசியல்

“மோடி வெளிநாடுகளில் மட்டுமே இருக்கிறார் - இந்தியாவில் இருப்பது குறைவு தான்” : தயாநிதிமாறன் குற்றச்சாட்டு!

“ ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ நடத்த திட்டமிடுகிறார்கள், இப்போது தான் காஷ்மீருக்கே தேர்தல் நடத்துகிறார்கள். இதன் மூலம் பா.ஜ.க அரசு ஏதோ சதி செய்கிறதோ என்பதாக தான் தோன்றுகிறது.”

“மோடி வெளிநாடுகளில் மட்டுமே இருக்கிறார் - இந்தியாவில் இருப்பது குறைவு தான்” : தயாநிதிமாறன் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில், பா.ஜ.க தலைவர்களின் அலட்சியம் மற்றும் அவமதிப்பு நடவடிக்கைகளை தி.மு.க கோவை மண்டல ஆலோசனை கூட்டத்தில் எடுத்துரைத்தார் தி.மு.க மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன், “கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்போ அல்லது சாதி வாரி கணக்கெடுப்போ நடத்தவில்லை. ஆனால், பல நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள்.

ஆனாலும், அதையெல்லாம் விட்டுவிட்டு, ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ நடத்த திட்டமிடுகிறார்கள், இப்போது தான் காஷ்மீருக்கே தேர்தல் நடத்துகிறார்கள். இதன் மூலம் பா.ஜ.க அரசு ஏதோ சதி செய்கிறதோ என்பதாக தான் தோன்றுகிறது.

குறிப்பாக ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டத்தில் பல குழப்பங்கள் உள்ளது. எனினும், இது குறித்து கேள்வி கேட்டால் பதில் ஏதுமில்லை. மக்கள் தங்களது சிக்கல்களை சொன்னால் பா.ஜ.க அரசு அதை திசை திருப்ப தான் எண்ணுகிறார்கள். அதற்கு அன்னபூர்ணா விவகாரம் தான் உதாரணம்.

அன்னபூர்ணா விவகாரத்தில் கோவை மக்களை மிரட்டுகிறார்களோ என்று தோன்றுகிறது, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வட மாநிலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ஹிந்தி மொழி மூலம் பேசி கேள்வி கேட்டால் அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்.

“மோடி வெளிநாடுகளில் மட்டுமே இருக்கிறார் - இந்தியாவில் இருப்பது குறைவு தான்” : தயாநிதிமாறன் குற்றச்சாட்டு!

ஆனால் இங்கு ஒருவர் தமிழில் பேசி கேள்வி கேட்டால் மரியாதை கொடுப்பதில்லை. குறிப்பாக மக்கள் பிரச்சனை பேசினால் நான் வெங்காயம் சாப்பிடவில்லை என்கிறார். மருத்துவம் படிப்பது என்றால் சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்கிறார். நீட் தேர்வில் நடந்த முறைகேட்டில் கல்வித்துறை அமைச்சர் ராஜீனாமா செய்தாரா?

நீட் தேர்வில் பல முறைகேடு நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மக்களை அண்ணா , கலைஞர் , பெரியார் ஆகியோர் படிக்க வைத்துவிட்டார்கள். அதனால், தான் இவ்வளவு கேள்வி கேட்கிறார்கள்.

மோடி இந்தியாவில் இருப்பதே குறைவு. வெளிநாடுகளில் மட்டும் தான் இருக்கிறார். பா.ஜ.க அரசியல் என்றால், அது மதம் சார்ந்ததாகவே அமைந்துள்ளது.

அதிமுக மிக கஷ்டமான காலத்தில் உள்ளது. முதுகு தண்டு வளைந்துள்ளதால் தான் அவர்களால் இன்றும் நிமிர முடியவில்லை. கட்சியை பா.ஜ.க.விடமும் அடிமையாக வைத்திருந்ததே எடப்பாடி பழனிச்சாமி செய்த மிகப்பெரிய தவறு

அ.தி.மு.க.வின் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்தது குறித்து ஒபிஎஸ் கூறிய கருத்துக்கு பதிலளித்த தயாநிதி மாறன், ஒன்றாக ஆட்சி செய்யும் போது பணம் வாங்கிய போதும் தெரியாதா?” எனவும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories