மூன்றாம் முறையாக பிரதமர் பதவியேற்றுள்ள மோடியின் முதல் 100 நாள் ஆட்சி நாட்டுக்கு மிக கடினமான நாட்களாக இருந்தன என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
3 ஆம் முறையாக பிரதமர் பதவியேற்றுள்ள மோடியின் ஆட்சி 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், மோடியின் ஆட்சியில் நாடு இன்னல்களை மட்டுமே சந்தித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், மோடியின் 109 நாள் ஆட்சி நாட்டுக்கு மிக கடினமான நாட்களாக இருந்தன என்று விமர்சித்துள்ளார்.
மக்கள் நலனுக்கான எந்த திட்டமும் இல்லை, எந்த பொறுப்பும் இல்லை, ஒரே பசப்பு வார்த்தைகள், அந்தர் பல்டிகள் என மோடி அரசு நாட்டையும், நாட்டு மக்களையும் ஏமாற்றி வருவதாக அவர் சாடியுள்ளார்.
இந்த மோசடியாளர்களிடம் சிக்கி நாடு சோர்வடைந்துள்ளதாக மல்லிகார்ஜுனகார்கே கவலை தெரிவித்துள்ளார். மோடி ஆட்சியால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், இனியும் மோடி ஆட்சியை மக்களால் சகித்துக் கொள்ள முடியாது என்று திட்டவட்ட மாக தெரிவித்துள்ளார்.
மோடியின் 100 நாள் ஆட்சி நாட்டுக்கு மிக கடினமான நாட்களாகவே இருந்தன மக்கள் நலனுக்கான எந்த திட்டமும்இல்லை, எந்தப் பொறுப்பும் இல்லை, ஒரே பசப்பு வார்த்தைகள், அந்தர் பல்டிகள் மோடி அரசு நாட்டையும், நாட்டு மக்களையும் ஏமாற்றி வருகிறது. இந்த மோசடியாளர்களிடம் சிக்கி நாடு சோர்வடைந்துள்ளது என்று மல்லிகார்ஜுன கார்கே கவலை தெரிவித்துள்ளார்.