அரசியல்

“பா.ஜ.க.வின் அடக்குமுறை நடைமுறையால் நாடு தத்தளிக்க நேரிடும்!” : சமூக சிந்தனையாளர்கள் கண்டனம்!

இந்தியாவில் இந்து - முஸ்லீம் மதத்தினரை, ஒன்றிய பா.ஜ.க அரசு கையாளும் விதம் குறித்து நடத்தப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்ற கலைஞர்கள், ஒன்றிய அரசின் மீது தங்களது விமர்சனத்தை முன்வைத்தனர்.

“பா.ஜ.க.வின் அடக்குமுறை நடைமுறையால் நாடு தத்தளிக்க நேரிடும்!” : சமூக சிந்தனையாளர்கள் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் நடக்காத துறையும் இல்லை, துன்புறுத்தப்படாத சிறுபான்மை சமூகமும் இல்லை என்பதற்கு இணங்க, பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

அவ்வாறிருக்கிற நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் அரசியல் கட்சி தலைவர்களாக இருந்தாலும் சரி, மாநில முதல்வர்களாக இருந்தாலும் சரி, சமூக ஆர்வலர்களாக இருந்தாலும் சரி, உழவர் பெருமக்களாக இருந்தாலும் சரி, ஊடகவியலாளர்களாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் சிறை தண்டனையே.

அதில் சட்ட உதவி பெறாத பல சிறுபான்மையினர் வீடுகள் இடிப்பும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரங்கேறியுள்ளன. இதனை ஊடகங்கள் எடுத்துக்கூறும் நிலையில், ஊடகங்கள் முடக்கப்படுவதும் இயல்பான நடவடிக்கையாக மாறியுள்ளது.

“பா.ஜ.க.வின் அடக்குமுறை நடைமுறையால் நாடு தத்தளிக்க நேரிடும்!” : சமூக சிந்தனையாளர்கள் கண்டனம்!

இந்நிலையில், இந்தியாவில் இந்து - முஸ்லீம் மதத்தினரை, ஒன்றிய பா.ஜ.க அரசு கையாளும் விதம் குறித்து நடத்தப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்ற கலைஞர்கள், ஒன்றிய அரசின் மீது தங்களது விமர்சனத்தை முன்வைத்தனர்.

“பா.ஜ.க.வின் அடக்குமுறை நடைமுறையால் நாடு தத்தளிக்க நேரிடும்!” : சமூக சிந்தனையாளர்கள் கண்டனம்!

அவ்வகையில், பிரபல Standup Comedian சஞ்சய் ரஜௌரா, “உமர் காலித், சர்ஜீல் இமாம், சஞ்ஜீவ் பட் மற்றும் மீரன் ஹைடர் போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகள், நம் நாட்டிற்கு கிடைத்த பெருமை. அவர்களை சிறையில் அடைத்து, சிறை கதவை திறப்பதற்கான வழி மூடப்பட்டால், நாடு தத்தளிக்க நேரிடும்” என கண்டனம் தெரிவித்தார்.

“பா.ஜ.க.வின் அடக்குமுறை நடைமுறையால் நாடு தத்தளிக்க நேரிடும்!” : சமூக சிந்தனையாளர்கள் கண்டனம்!

அவரைத் தொடர்ந்து பேசிய பிரபல Standup Comedian குணால் கம்ரா, “இந்தியாவில் நடக்கும் சிக்கல்களை கூறியும், தற்போது நான் மேடையில் நின்று பேசுகிறேன் என்றால், அதற்கு நான் இந்துவாக இருப்பதே காரணம். நான் இஸ்லாமியராக இருந்திருந்தால், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் போல் சிறைக்கு அனுப்பப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பேன்” என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories