அரசியல்

பாஜக அரசின் 100 நாட்களில் நடந்தது இதுதான் - மோடி அரசின் தோல்விகளை பட்டியலிட்ட மல்லிகார்ஜூன கார்கே !

பாஜக அரசின் 100 நாட்களில் நடந்தது இதுதான் - மோடி அரசின் தோல்விகளை பட்டியலிட்ட மல்லிகார்ஜூன கார்கே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக அரசு மூன்றாம் முறையாக ஆட்சிபொறுப்பேற்று 100 நாட்கள் ஆகவுள்ள நிலையில், பாஜக அரசின் 100 நாள் அஜெண்டா என்ன ஆனது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ” பாஜக அரசின் 100 நாள் அஜெண்டா என்ன ஆனது? ஆட்சிப் பொறுப்பேற்ற 95 நாட்களில் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு ஊசலாயி வருகிறது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையை அதிகரிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களில் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

கடந்த 16 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் வன்முறையால் பற்றி எரிந்து வரும் நிலையில் ஒருமுறை கூட பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, வேலை கேட்டு போராடிய இளைஞர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிய காட்சிகள், இவை அனைத்தையும் மறக்க முடியாது.

பாஜக அரசின் 100 நாட்களில் நடந்தது இதுதான் - மோடி அரசின் தோல்விகளை பட்டியலிட்ட மல்லிகார்ஜூன கார்கே !

மோடி அரசு இளைஞர்களை ஏமாற்றி விட்டதாகவும், புதிதாக திறக்கப்பட்ட சிவாஜி சிலை, புதிய விமானநிலையங்கள், புதிய நாடாளுமன்ற கட்டிடம், அயோத்தி ராமர் கோவில், பாலங்கள், சாலைகள், சுரங்கங்கள் என எவற்றையெல்லாம் மோடி திறந்து வைத்தாரோ அவற்றில் எல்லாம் குறைபாடுகள் உள்ளது. மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், அதற்கான நிவாரண தொகைகளும் மாநில அரசுகளுக்கு விடுவிக்கப்படவில்லை.

அதே நேரம் இந்தியா கூட்டணி கட்சிகளின் தீவிர எதிர்ப்பால், வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. ஒன்றிய பாஜக அரசின் 100 நாள் அஜெண்டா என்னவென்று யாருக்கும் தெரியாத நிலையில், 95 நாட்களில் நாடு, பல துயரங்களை கண்டுள்ளது” என அதில் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories