அரசியல்

சைவ பொருளில் அசைவ பொருளை சேர்த்து விற்பனை ? சர்ச்சையில் பதஞ்சலி நிறுவனம்... உயர்நீதிமன்றம் நோட்டீஸ் !

சைவ பொருளில் அசைவ பொருளை சேர்த்து விற்பனை செய்ததாக மிகப்பெரும் சர்ச்சையில் பதஞ்சலி நிறுவனம் சிக்கியுள்ளது.

சைவ பொருளில் அசைவ பொருளை சேர்த்து விற்பனை ? சர்ச்சையில் பதஞ்சலி நிறுவனம்... உயர்நீதிமன்றம் நோட்டீஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆதரவாளரான யோகா சாமியார் ராம்தேவ், பதஞ்சலி எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தை பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் அதிகளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே இது இந்திய அளவில் முக்கியமான நிறுவனமாக வளர்ந்தது.

சமீபத்தில் அலோபதி மருத்துவத்துக்கு எதிரான பல்வேறு பொய்யான விளம்பரங்களையும் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு பரப்பி வந்தது. அதில் பல தவறான கருத்துக்களும், அலோபதி மருத்துவத்துக்கு எதிரான கருத்துக்களும் இருந்தது. இதனால் பொதுமக்களிடையே தவறான கருத்துகள் பரவியது.

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பாபா ராம்தேவ் சார்பிலும் பதஞ்சலி சார்பிலும் நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரப்பட்டது. இந்த நிலையில், தற்போது மற்றொரு மிகப்பெரும் சர்ச்சையில் பதஞ்சலி நிறுவனம் சிக்கியுள்ளது.

சைவ பொருளில் அசைவ பொருளை சேர்த்து விற்பனை ? சர்ச்சையில் பதஞ்சலி நிறுவனம்... உயர்நீதிமன்றம் நோட்டீஸ் !

பதஞ்சலி நிறுவனம் சார்பில் சைவம் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களை சுட்டிக்காட்டும் வகையில் பச்சை நிறத்தில் புள்ளி வைத்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் சைவ பற்பசை என்ற பெயரில் விற்பனையாகும் பதஞ்சலி நிறுவனத்தின் பொருளில் சாமுத்ரபீன் (Sepia Officinalis) என்ற மீன் வகையின் சாறு சேர்க்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் யதீன் சர்மா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் "ஆயுஷ் அமைச்சகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை"என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளிக்க பதஞ்சலி நிறுவனத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories