அரசியல்

சுமார் ரூ. 3,600 கோடியை தூள் தூளாக்கிய NDA அரசு : சத்ரபதி சிவாஜி சிலை இடிந்ததற்கு காரணம் யார்?

சுமார் ரூ. 3,600 கோடியை தூள் தூளாக்கிய NDA அரசு : சத்ரபதி சிவாஜி சிலை இடிந்ததற்கு காரணம் யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கட்டுமான பிழைகளுக்கு பஞ்சமில்லை என்ற நிலை நாளுக்கு நாளுக்கு நிரூபிக்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக கட்டுமானம் நிறைவுற்று ஓராண்டு கூட நிறைவுறாத கட்டடங்கள் இடிவதும், கட்டுமானத்தில் குறைகள் உருவாவதும் மிகவும் சாதாரண செய்தியாக மாற்றம் கண்டுள்ளது.

இந்திய புதிய நாடாளுமன்ற கூரையில் நீர் கசிவு, உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ராமர் கோவில் கூரையில் நீர் கசிவு, டெல்லி சுரங்கத்தில் நீர் கசிவு, மகாராஷ்டிர மேம்பாலத்தில் விரிசல், டெல்லி வானூர்தி நிலைய மேற்கூரை இடிமானம் என அதற்கான எடுத்துகாட்டுகளும் நீண்டு வருகின்றன.

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் நூற்றுக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்டுள்ளன. இதுவே, பா.ஜ.க.வினர் முன்மொழிகிற கட்டுமான வளர்ச்சியாகவும் அமைந்துள்ளது.

அவ்வரிசையில் தற்போது புதிதாக இணைக்கப்பட்ட கட்டுமான பிழை தான், மகாராஷ்டிர மாநிலத்தில் மழைக்காற்றுக்கு கூட தாங்காமல் தூள் தூளான சத்ரபதி சிவாஜி சிலை.

35 அடி உயரம் கொண்ட இச்சிலை சுமார் ரூ. 3,600 கோடி செலவு செய்துள்ளது அரசு. அரசு செலவு செய்திருக்கிறது என்றால் மக்கள் வரியாக செலுத்திய பணத்தை செலவு செய்திருக்கிறது என்பதே பொருள்.

சுமார் ரூ. 3,600 கோடியை தூள் தூளாக்கிய NDA அரசு : சத்ரபதி சிவாஜி சிலை இடிந்ததற்கு காரணம் யார்?

அவ்வகையில், மக்கள் பணமான ரூ. 3,600 கோடியில் கட்டி எழுப்பப்பட்ட இச்சிலையை, பிரதமர் மோடி 8 மாதங்களுக்கு முன் திறந்துவைத்தார்.

சிலையை கட்டுவதற்கான டெண்டர் NDA கூட்டணியில் இருக்கிற சிவசேனா (ஷிண்டே) கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவின் வலியுறுத்தலின் பேரில், ஜெய்தீப் ஆப்தேக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், 24 வயதே ஆன ஜெய்தீப் ஆப்தே, ஏக்நாத் ஷிண்டேவின் நெருங்கிய நண்பர் என்ற தகுதி பெற்றவரே தவிர, அவருக்கு சிலை செய்வதில் எவ்வித முன் அனுபவம் இல்லை என்ற குற்றச்சாட்டு வலுக்கத்தொடங்கியுள்ளது.

இதனால், நண்பர், தெரிந்தவர், நன்கொடையாளர் என்ற காரணங்களுக்காக டெண்டர்கள் ஒதுக்கப்படுவதும், அவ்வாறு கட்டி எழுப்பப்படும் கட்டுமானங்கள் ஒரு ஆண்டுக்கூட தாக்குப்பிடிக்காததும் ஒன்றிய பா.ஜ.க அரசின் கட்டுமான தோல்வியை வெளிச்சமிட்டு காட்டி வருகின்றதாய் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories