அரசியல்

பட்டியலின பெண் ஊராட்சி தலைவருக்கு மறுக்கப்பட்ட உரிமை : மத்தியப் பிரதேசத்தில் எழுந்த மற்றொரு சர்ச்சை!

பட்டியலின பெண் ஊராட்சி தலைவருக்கு மறுக்கப்பட்ட உரிமை : மத்தியப் பிரதேசத்தில் எழுந்த மற்றொரு சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பா.ஜ.க ஆட்சியில் மத்தியப் பிரதேசத்தில் பல மதவாத, சாதியவாத சிக்கல்கள் அரங்கேறி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு, உயர்கல்வி பாடதிட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் புத்தகங்களை இடம்பெற வைத்து உத்தரவிட்டது மத்தியப் பிரதேச பா.ஜ.க அரசு.

மேலும், ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர பற்றாளரையே, மத்தியப் பிரதேச முதல்வராகவும் பதவி வகிக்க வைத்துள்ளது பா.ஜ.க தலைமை. இதனால், அடக்குமுறைவாத எண்ணங்கள் பரப்பப்பட்டு, பல வகையில் சிறுபான்மையினர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அவ்வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரும், வகுப்புவாத நடவடிக்கையால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்.

அதன் வெளிப்பாடாக, ஊராட்சி தலைவராக பதவி வகித்திருக்கும் நிலையிலும், அவர் பட்டியலின பெண் என்ற காரணத்தால், ஊராட்சி அலுவலகத்தில் உட்கார நாற்காலி தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், நாற்காலியில் உட்கார விரும்பினார் வீட்டிலிருந்து நாற்காலி கொண்டு வரும்படியும், இல்லையென்றால் தரையில் உட்காரும் படியும் தெரிவித்துள்ளனர், இதர அலுவலகர்கள்.

இதே பெண்ணிற்கு, விடுதலை நாள் அன்று கொடியேற்றும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை சுட்டிக்காட்டி, தனது X தளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சி, “இது போன்ற சமூகநீதிக்கு எதிரான எண்ணத்தை தூக்கிப்பிடிக்கிற தன்மைக்கு எதிராக உடனடி நடவடிக்கை வேண்டும். மோடி ஆட்சியில் நீடிக்கிற Anti-Dalit மனப்பான்மை அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான உரிமை காக்கப்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories