அரசியல்

“அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் சதித்திட்டம்” - ஒன்றிய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம் !

அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் சதித்திட்டம் தீட்டுவதாக ஒன்றிய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் சதித்திட்டம்” - ஒன்றிய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தததில் இருந்தே மக்களுக்கு பல வகையில் குடைச்சல் கொடுத்து வருவதோடு, மனு சித்தாந்தத்தையும் புகுத்த பல வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது அனைவரும் சமமாக வாழ்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் நாட்டை பின்னோக்கி இழுத்து செல்லும் சதிகார வேலையில் ஈடுபட்டு வருகிறது.

பாடப்புத்தகங்களில் கூட மனு இடம்பெற வேண்டும் என்று பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் கூட பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் குறித்த குறிப்புகள் உயர்கல்வி பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்திய ஆட்சிப்பணியில் இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ல் இயங்கக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அதோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருப்பவர்களுக்கு பல விஷயங்களில் முன்னுரிமையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. இப்படியாக தொடர்ந்து அடிப்பையான கல்வி முதல் இந்திய அரசின் பணிகள் வரை ஆர்.எஸ்.எஸ்.-ல் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக எம்.பி. வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் சதித்திட்டம்” - ஒன்றிய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம் !

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளரும் எம்.பி-யுமான வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :

"மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியை குழித் தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியில் இருந்து வந்த தனியார் நிறுவன உயர் அலுவலர்களை அரசின் செயலாளர்கள், மற்றும் உயர் அதிகாரிகளாக நியமனம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தனியார் துறையில் சிறப்பாகச் செயல்படும் தலைமைச் செயல் அதிகாரிகளை, நேரடியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கும் திட்டம் என்ற பெயரில் கடந்த 2018ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதே திட்டத்தின் கீழ் புதிதாக மேலும் 45 பேரை நியமிக்க ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டம் அப்பட்டமான சட்ட மீறல் மட்டும் அல்ல, அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் கொடும் தாக்குதல் ஆகும். இதன் மூலம் அரசு நிர்வாகம் முழுமையாக ஆர்.எஸ்.ஸ். பிடியின் கீழ் செல்லும் வகையில் பாதை அமைக்கும் சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.

“அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் சதித்திட்டம்” - ஒன்றிய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம் !

"ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கிய பதவிகளில் லேட்டரல் என்ட்ரி ஆட்சேர்ப்பு மூலம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு வெளிப்படையாகப் பறிக்கிறது; நாட்டின் உயர்மட்ட அதிகாரம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் பட்டியலின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து கூறி வருகிறேன். இதனை மேம்படுத்துவதற்குப் பதிலாக, லேட்டரல் என்ட்ரி மூலம் பட்டியலினத்தைச் சேர்ந்தோர் உயர் பதவிகளில் இருந்து மேலும் வெளியே தள்ளப்படுகிறார்கள்.

இந்தச் செயல் யு.பிஎஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். மேலும் இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதியின் மீது ஒன்றிய அரசு தொடுத்துள்ள தாக்குதலாகும்” என்று காங்கிரஸ் கட்சி முன்னணித் தலைவரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சுட்டிக் காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது ஆகும். இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்துப் போராடி அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்."

banner

Related Stories

Related Stories