அரசியல்

”மாட்டிறைச்சியில் ரூ.50,000 கோடி வருமானம் ஈட்டும் ஒன்றிய அரசு” : மக்களவையில் தங்க தமிழ்செல்வன் MP பேச்சு!

மாட்டிறைச்சியில் ரூ.50,000 கோடி ஒன்றிய அரசு வருமானம் ஈட்டுவதாக மக்களவையில் தங்க தமிழ்செல்வன் எம்.பி தெரிவித்துள்ளார்.

”மாட்டிறைச்சியில் ரூ.50,000 கோடி வருமானம் ஈட்டும் ஒன்றிய அரசு” : மக்களவையில் தங்க தமிழ்செல்வன் MP பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், இதன் மீதான விவாதம் முடிவடைந்து கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மக்களவையில் மீன்வளம், கால்நடைதுறை மீதான நிதி ஒதுக்கீடு குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் தி.மு.க MP தங்க தமிழ்செல்வன் பேசினார். அப்போது, ”31 துறைகள் பற்றி விவாதிப்பதற்கு பதிலாக 5 துறைகள் மீது மட்டுமே ஒன்றிய அரசு விவாதம் நடத்துகிறது. இது கண்டிக்கத்தக்க ஒன்று.

கால்நடைதுறைக்கு ரூ.4000 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு குறைவானது. மாடுகளை பாதுகாப்பதாக கூறும் ஒன்றிய அரசு மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் ரூ.50,000 கோடி வருமானம் ஈட்டி வருகிறது.

தமிழ்நாடு அரசின் நிதி ஒதுக்கீட்டால் தமிழ்நாடு பால் உற்பத்தியில் 11 ஆவது இடத்தில் உள்ளது. பால் உற்பத்தியாளர்கள் தயாரிக்கும். சாதாரண நெய்கான ஜி.எஸ்.டியை ரத்துசெய்ய வேண்டும்.பால் வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories