அருந்ததியினர் உள் இட ஒதுக் கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் என்ற செல்லும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய திராவிட மாடல் அரசுக்குக் கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு என தினகரன் நாளேடு தலையங்கத்தில் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
அது வருமாறு:- பின்தங் சமுதாயத்தில் கிய நிலையில் வாழும் அருந்ததியின மக்களின் அவல வாழ்வை அகற்றிடமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கடந்த 2008ம் ஆண்டில் திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் எம். எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் 25.3.2008 அன்று குழு அமைத்தார். அந்த குழு வழங்கிய பரிந்துரையின்படி, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி இருப்பதால் முன்னேற்றத்திற்கு அவர்தம் சிறப்பு சலுகைகள் அளிப்பது அவசியம் எனக்கருதி, ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு உள் வழங்குவதற்காக இடஒதுக்கீடு 27.11.2008 அன்று கூடிய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.
அந்த முடிவின்படி சட்டம் முனைந்தபோது இயற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உடல்நலம் குன்றி சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது. அவரது அறிவுரைப்படி, தமிழ்நாடு அரசின் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அருந்ததியினருக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை பேரவையில் 26.2.2009 அன்று அறிமுகம் செய்து நிறைவேற்றினார். 29.4.2009 அன்று இதுதொடர்பான விதிகள் உருவாக் கப்பட்டு, வெற்றிகரமாக நடைமு றைப்படுத்தப்பட்டது. இந்த உள்இடஒதுக்கீட்டினால் அருந்ததிய இளைஞர்கள் பெற்ற பயன்கள் அதிகம். அதாவது. 2009-2010ல் அருந்ததியின சமுதாயத்தைச் சேர்ந்த 56 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளிலும் 1,165 மாணவ, மாணவிகள் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து, மொத்தம் 1,221 பேர் பயன் பெற்றனர். 2010-2011ல் இந்த எண்ணிக்கை மருத்துவ கல்லூரிகளில் 87 என்றும், பொறியியல் கல்லூரிகளில் 3,414 என்றும், பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் 779 பேர் என்றும், கலை கல்லூரிகளில் 5,319 பேர் என்றும், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 147 பேர் என்றும், பள்ளிகளில் 42,269 பேர் என்றும் மொத்தம் 52.015 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், இந்த 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2020ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், ஏற்கனவே, அதாவது 2004ம் ஆண்டிலேயே உள் இடஒதுக் கீட்டை அனுமதிக்கக் கூடாது என்று ஆந்திர மாநில வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதன் காரணமாக, அருந்ததியினருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இந்த வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலை மையிலான 7 நீதிபதிகள் அமர்வு பட்டியலின பழங்குடியினருக்கான உள் இடஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும், அருந்ததியினர் உள் இடஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் தீர்ப்பினை என்று ஒருமித்த 1.8.2024 அன்று வழங்கினர். உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாடே பாராட்டுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலை தளபதிவில், "ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் பயணத்திற்கான மற்றுமொரு அங்கீகாரமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்திருக்கிறது. இந்த தீர்ப்பு இந்தியாவிற்கே வழி காட்டக்கூடிய திராவிட மாடல் அரசின் ஓர் உன்னதமான திட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு. இது என்றும் நினைவுகூரத்தக்கது." எனக் கூறியுள்ளது. இதுதான் உண்மை.