அரசியல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதமாவது உண்மை தான் : மக்களவையில் ஒப்புக்கொண்ட ஜெ.பி.நட்டா!

அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளாகியும், செங்கல் கூட வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ் இடம் : தி.மு.க கொறடா ஆ. ராசா குற்றச்சாட்டு.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதமாவது உண்மை தான் : மக்களவையில் ஒப்புக்கொண்ட ஜெ.பி.நட்டா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் பட்ஜெட் அறிமுகத்தில் தொடங்கி, ஒரு வாரத்தைக் கடந்துள்ள நிலையில், ஒன்றியத்தின் பல்வேறு துறைகளில் உள்ள சீர்கேடுகளையும், முறைகேடுகளையும், தாமதப் போக்கையும், அலட்சியப்போக்கையும் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அவ்வகையில் உள்துறை, கல்வித்துறை, பாதுகாப்புத்துறை, தொடர்வண்டித்துறை என பல்வேறு துறைகள் மீது எண்ணற்ற விமர்சனங்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்றைய நாள் (02.08.24) மக்களவை கூட்டத்தொடரில் பேசிய தி.மு.க.வின் மக்களவை கொறடா ஆ. ராசா அவர்கள், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அரசு கூறி வருகிறது. ஆனால், இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஏன் ஒரு செங்கல் கூட அங்கு நிறுவப்படவில்லை. தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, ““மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதம் ஏற்பட்டு இருப்பது உண்மை தான்” என்று ஒப்புக்கொண்டார். மேலும், விரைவில் வேலைகள் தொடங்கப்படும் என்றும் தெரித்தார்.

இதனையடுத்து பலரும், 5 ஆண்டுகளாக வேலைகள் தொடங்கப்படும் என்ற பதில் வருகிறதே தவிர, நடவடிக்கைகளில் மந்தமே நிலவி வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories