அரசியல்

விமான நிலையங்கள் விபத்து : மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? - தயாநிதி மாறன் எம்.பி கேள்வி !

விமான நிலையங்கள் விபத்து : மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? - தயாநிதி மாறன் எம்.பி கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 23-ம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த பட்ஜெட்டில் தனது நாற்காலியை தக்க வைத்து கொள்வதற்காக, பாஜக தனது கூட்டணி கட்சிகளுக்கு என்று நிதி அறிவிப்பினை வாரி வழங்கியுள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒன்றிய பாஜக அரசு நிராகரித்துள்ளது.

தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், விமான நிலையங்களில் நடந்து வரும் விபத்துகளை குறித்து ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன? என்று மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் கழக நாடாளுமன்ற குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விமான நிலையங்கள் விபத்து : மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? - தயாநிதி மாறன் எம்.பி கேள்வி !

டெல்லி விமான நிலையத்தில் கூரை இடிந்து விழுந்ததுபோல், குவஹாத்தி, ராஜ்கோட் மற்றும் ஜபல்பூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் விமான நிலையங்களிலும் விபத்துகள் நிகழ்ந்த நிலையில், ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என நாடாளுமன்றத்தில் ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடம் கழக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவர் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு :

* நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில், குறிப்பாக டெல்லி, குவஹாத்தி, ராஜ்கோட் மற்றும் ஜபல்பூர் ஆகிய இடங்களில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவங்கள் குறித்து அரசு அறிந்திருக்கிறதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

* சம்பவங்களில் பதிவான இறப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் என்ன ?

* காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் ஏதேனும் நிதி இழப்பீடு வழங்கியுள்ளதா மற்றும் அப்படியானால், கடந்த ஐந்தாண்டுகளில் இதுபோன்ற ஒவ்வொரு சம்பவத்திற்கும் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு நிதியின் விவரங்கள் என்ன?

விமான நிலையங்கள் விபத்து : மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? - தயாநிதி மாறன் எம்.பி கேள்வி !

* இந்த விபத்துகள் குறித்து அரசாங்கம் ஏதேனும் விசாரணையைத் தொடங்கியுள்ளதா மற்றும் அப்படியானால், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்கள் என்ன?

* மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் ஆய்வு செய்ய அரசாங்கம் முன்மொழிகிறதா மற்றும் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளும் அதன் விவரங்களும் என்ன?

* ஒப்பந்ததாரர்களுக்கு என்ஓசி/சிசி வழங்குவதற்கு முன்பு முறையான தணிக்கை/ஆய்வுகள் செய்துவரப்படவில்லை என்பது உண்மையா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

* பாதிக்கப்பட்ட விமான நிலையங்களில் அடையாளம் காணப்பட்ட கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கை என்ன?

* கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்து விமான நிலையங்களிலும் நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வுகள் ஏதேனும் தொடங்கப்பட்டுள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் யாவை? என கேள்விகளை எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories