அரசியல்

நிதி ஆயோக் கூட்டம் - ஒன்றிய அரசை புறக்கணித்த 9 மாநில முதலமைச்சர்கள்!

இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை 9 மாநில முதலமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர்.

நிதி ஆயோக் கூட்டம் - ஒன்றிய அரசை புறக்கணித்த 9 மாநில முதலமைச்சர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், மைனாரிட்டி பாஜக ஆட்சியை தக்கவைக்க உதவிய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே கூடுதல் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களின் சிறப்பு திட்டங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பிற மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. அதிலும் தமிழ்நாட்டின் பெயர் கூட பட்ஜெட்டில் இல்லாத நிலையில், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குவதாக அறிவித்த நிதியை விடுவிப்பதாக கூட எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய நிதி ஆயோக் கூட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சுகு, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் ஆகியோருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மேலும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

முதல் முதலில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அறிவித்தார். தமிழ்நாட்டை பின்பற்றி இந்தியா கூட்டணி முதலமைச்சர்கள் அடுத்தடுத்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories