அரசியல்

தமிழ்நாட்டை பின்பற்றும் இந்தியா... நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகா,மேற்கு வங்க சட்டமன்றத்தில் தீர்மானம் !

நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பின்பற்றும் இந்தியா... நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகா,மேற்கு வங்க சட்டமன்றத்தில் தீர்மானம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

தற்போது நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் வெளிவந்துள்ள நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்றன.

தமிழ்நாட்டை பின்பற்றும் இந்தியா... நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகா,மேற்கு வங்க சட்டமன்றத்தில் தீர்மானம் !

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நீட் தேர்வு ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கிறது என்று கருத்து தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யவும், நீட் தேர்வில் கர்நாடகாவுக்கு விலக்கு அளிக்க கோரியும் கர்நாடக மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று மேற்கு வங்க சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories