அரசியல்

ஒன்றிய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேருவதற்கான தடை நீக்கம் : RSS-க்கு சாதகமாக செயல்படும் மோடி!

ஒன்றிய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேருவதற்கான தடையை நீக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு ஊழியர்கள்  RSS இயக்கத்தில் சேருவதற்கான தடை நீக்கம் : RSS-க்கு சாதகமாக செயல்படும் மோடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

RSS அமைப்பின் கொள்கைகளைத்தான் ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 10 ஆண்டுகளாக கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அமல்படுத்தி வருகிறது. சாவக்கருக்கு சிலை, அவரது பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு என RSS அமைப்பிற்காக பா.ஜ.க செயல்படுகிறது என்பதை இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

தற்போது அரசு துறைகளையே RSS மையமாக மாற்ற பா.ஜ. முயற்சித்து வருகிறது. அதன் வெளிப்பாடுதான், ஒன்றிய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேருவதற்கான தடையை நீக்கியுள்ளது.

ஒன்றிய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேருவதற்கான தடை இருந்தது. தற்போது இந்த தடையை நீக்கி RSS- பா.ஜ.கவுக்கும் இருக்கும் உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.இதையடுத்து இந்த தடை நீக்கத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒன்றிய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேருவதற்கான தடை நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”காந்திஜியின் படுகொலையைத் தொடர்ந்து 1948 பிப்ரவரியில் சர்தார் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்தார்.

இதையடுத்து நன்னடத்தை உறுறுதியளித்ததன் பேரில் தடை வாபஸ் பெறப்பட்டது. அதன்பின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் மூவர்ணக் கொடி பறக்கவில்லை. 1966ல், ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த முடிவு சரியானதுதான்.

பிரதமர் மோடிக்கும் - RSS-க்கும் இடையிலான உறவு ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு மூக்குடைந்துவிட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட நடைமுறையில் இருந்த தடை தற்போது 58 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அரசின் இந்த முடிவால் அரசு அதிகாரிகள் டவுசர் அணிந்து கொண்டு அலுவலகங்களுக்கு வரலாம்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories